குழந்தையுடன் பாட்டியை காப்பாற்றிய யானை: வயநாட்டில் நெகிழ்ச்சி சம்பவம்
வயநாடு நிலச்சரிவில் யானையின் கருணையால் மொத்த குடும்பமும் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 344 -ஆக உயர்ந்துள்ளது. இந்த எண்னிக்கை 500யை தாண்ட கூடும் என்று கேரள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இதுவரை 9328 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
யானையின் கரிசனம்
வயநாடு, முண்டகையில் உள்ள ஹாரிசன்ஸ் தேயிலை தோட்டத்தில 18 ஆண்டுகளாக தேயிலை பறிக்கும் தொழிலாளி சுஜாதா அனிநஞ்சிரா.
இவர் தன்னுடைய மகள் சுஜிதா, மருமகன் குட்டன், பேரக்குழந்தைகள் சூரஜ் (18), மிருதுளா (12) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இவரது குடும்பம் யானையின் கருணையால் காப்பாற்றப்பட சம்பவம் தற்போது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து பாட்டி சுஜாதா கூறுகையில், "கடந்த திங்கள் கிழமை மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர், நள்ளிரவை தாண்டி அடுத்த நாள் காலை 4 மணிக்கு கனமழையாக மாறியது.
இதனால் வீட்டை சுற்றி தண்ணீர் சூழ்ந்ததும் நாங்கள் அருகில் உள்ள குன்றுக்கு சென்றோம். ஆனால், அங்கு யானைகள் கூட்டம் தஞ்சம் அடைந்திருந்தது.
எங்களுக்கு சில தூரத்தில் தான் யானைகள் இருந்தன. அதன் கால்களுக்கு அடியில் தான் இரவு முழுவதும் இருந்தோம். அப்போது யானையின் கண்களை பார்க்கையில் எங்களுடைய நிலைமையை யானை புரிந்து கொண்டது போல தெரிந்தது.
காலையில் மீட்பு குழுவினர் வந்து எங்களை மீட்கும் வரை யானை தான் எங்களுக்கு பாதுகாப்பாக இருந்தன. அப்போது யானையின் கண்கள் துளிர விட்டு ஆசிர்வதிப்பதை பார்க்க முடிந்தது. இது மறக்கமுடியாத சம்பவம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |