ஏலக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்க... பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளி தருமாம்!
Weight Loss
Constipation
Bad breath
Depressed
By Kishanthini
ஏலக்காய் அதிக விலைமதிப்பு கொண்ட மசாலா பொருளாக விளங்குகிறது.
அதன் சுவை, மணம் உள்ளிட்ட பண்புகளால், பானங்கள் முதல் இனிப்பு வகைகள் வரை தயாரிக்க ஏலக்காய் பயன்படுத்தப்படுகிறது.
ஏலக்காயில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. பழங்காலம் தொட்டு இது சமையலில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, காப்பர், மாங்கனீஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன.
இதனை ஒரு சில பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும் போது இன்னும் பல நன்மைகளை தருகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- ஏலக்காய் விதைகளை தொடர்ந்து உட்கொள்வதன் மூலமாக மலச்சிக்கல், அமிலத்தன்மை, வாயு, வயிறு வீக்கம், வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை தடுக்கலாம்.
- ஏலக்காய் சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது, இது இரத்த நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதை ஊக்குவிக்கிறது.
- நன்றாக விருந்து சாப்பாட்டை ரசித்து ருசித்து சாப்பிட்ட பிறகு வாயில் ஒரு ஏலக்காயை போட்டு மென்று சாப்பிட்டால், அவை வலுவான பூண்டு அல்லது வெங்காய வாசனையை கூட அகற்ற உதவுகின்றன. ஏனென்றால் ஏலாக்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய் துர்நாற்றத்தை அகற்ற உதவுகின்றன.
- மனச்சோர்வாக இருக்கும் போது ஏலக்காய் கலந்த ஒரு கோப்பை தேநீர் உங்களுடைய மனநிலையையே முற்றிலும் மாற்றுவதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். அதன் சுவை மற்றும் வாசனை உணர்வுகளை தளர்த்த உதவுகிறது.
- வயிற்று பகுதியில் உள்ள அதிக கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் தண்ணீரைத் தக்கவைப்பது போன்ற விஷயங்களுக்கு உதவுவதால், ஏலக்காய் ஒரு முக்கிய எடை இழப்பு மசாலா பொருளாக விளங்குகிறது.
உணவில் ஏலக்காயை பயன்படுத்துவது எப்படி?
- கொதிக்கும் நீரில் சில திறந்த ஏலக்காய்களை சேர்க்கலாம்.
- உணவுக்கு பிறகு வாய் புத்துணர்ச்சியாக்க ஒரு ஏலக்காயை மென்று சாப்பிடலாம்.
- நிம்மதியான இரவு உறக்கத்திற்கு, படுக்கைக்கு செல்லும் முன்பு பாலில் ஒரு சிட்டிகை ஏலக்காயை மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு சேர்த்து அருந்தலாம்.
- கறிகள் மற்றும் ஹல்வா மற்றும் கீர் போன்ற இனிப்பு வகைகளில் சேர்க்கலாம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US