உலகம் மொத்தம் சர்ச்சையை ஏற்படுத்திய எலோன் மஸ்கின் அந்த செயல்
டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழா கொண்டாட்டங்களின் போது பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் தொடர்ச்சியாக பாசிச பாணி வணக்கங்களைச் சொல்லி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
உலகம் முழுக்க சர்ச்சை
வாஷிங்டனில் அமைந்துள்ள கேபிடல் ஒன் அரங்கத்தில் திரண்டிருந்த ட்ரம்ப் ஆதரவாளர்களிடம் உரையாற்றிய எலோன் மஸ்க், இப்படியான ஒரு நிகழ்வை சாத்தியமாக்கியதற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என தொடங்கினார்.
தொடர்ந்து தனது வலது கையை மார்பில் அறைந்தார். விரல்களை ஒன்றாக இணைத்து, உள்ளங்கையை கீழ்நோக்கி வைத்து, வலது கையை நீட்டி முழக்கமிட்டார். எல்லொன் மஸ்கின் இந்தச் செயலே தற்போது உலகம் முழுக்க சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யூத எதிர்ப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்கிற ADL என்ற அமைப்பு, எலோன் மஸ்கின் இச்செயலை நாஜி பாணி வணக்கம் என குறிப்பிட்டுள்ளது. கூட்டம் குரல் எழுப்ப, மஸ்க் மீண்டும் அதேபோன்று வணக்கம் செய்துள்ளார்.
மார்பில் கை வைத்து என் இதயம் உங்களை நேசிக்கிறது என்றார். மேலும், உங்களால்தான் நாகரிகத்தின் எதிர்காலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு நன்றி. நமக்குப் பாதுகாப்பான நகரங்கள், பாதுக்காப்பான எல்லைகள் சாத்திய்மாக உள்ளது என்றார்.
வெள்ளை மேலாதிக்க
ஆனால் தற்போது எலோன் மஸ்க் பேசிய கருத்துகள் எதுவும் விவாதிக்கப்படாமல், அவர் செய்த நாஜி பாணி வணக்கம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இதற்கு விளக்கமளிக்காத எலோன் மஸ்க் தொடர்புடைய காணொளியை தமது சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனிடையே இஸ்ரேலிய நாளேடான Haaretz, மஸ்க் நாஜி ஜேர்மனியுடன் பொதுவாக தொடர்புடைய ஒரு பாசிச வணக்கமான ரோமன் வணக்கத்தை நேரலையில் செய்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.
ADL அமைப்பு குறிப்பிடுகையில், 1933 மற்றும் 1945 க்கு இடையில் ஜேர்மனியில், நாஜி வணக்கம் பெரும்பாலும் ‘ஹெய்ல் ஹிட்லர்’ அல்லது ‘சீக் ஹெய்ல்’ என்று முழக்கமிடுவது அல்லது கூச்சலிடுவதுடன் தொடர்புடையது என குறிப்பிட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், நவ-நாஜிக்களும் பிற வெள்ளை மேலாதிக்கவாதிகளும் தொடர்ந்து இந்த வணக்கத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இது உலகின் மிகவும் பொதுவான வெள்ளை மேலாதிக்க வணக்க அடையாளமாக பார்க்கப்படுகிறது என பதிவு செய்துள்ளது.
பொதுவாக சமீபத்திய மாதங்களில், தீவிர வலதுசாரிகளை ஆதரிப்பதை எலோன் மஸ்க் வழக்கமாக கொண்டுள்ளார். ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் எலோன் மஸ்க் மீதான குற்றச்சாட்டாகவே இதை முன்வைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |