டிரம்ப்-க்கு ஆதரவாக பிரசாரத்தில் களமிறங்கிய எலான் மஸ்க்! சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டொனால்டு டிரம்ப்-க்கு ஆதரவாக உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் பிரச்சாரத்தில் களமிறங்கியுள்ளார்.
துப்பாக்கி சூடு நடந்த இடத்திற்கு திரும்பி வந்த டிரம்ப்
அமெரிக்க தேர்தல் சூடு பிடித்து வரும் நிலையில், கடந்த முறை துப்பாக்கி சூடு நடந்த பென்சில்வேனியாவின் பட்லரில் குடியரசு கட்சி வேட்பாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பிரச்சாரம் செய்தார்.
ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் தோன்றிய ட்ரம்ப், அங்குள்ளவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொண்டார். மேலும் நாம் பென்சில்வேனியாவை மிகவும் விரும்புகிறோம்."
அப்போது, “மிகவும் எளிமையான செய்தியை வழங்க பட்லருக்கு (Butler) திரும்புகிறேன்,” அது நாம் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக மாற்ற போகிறோம், நாம் தேர்தலில் வெற்றி பெற போகிறோம் என்பது தான் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் துப்பாக்கி சூடு குறித்து பேசிய டிரம்ப், துப்பாக்கி சூடு நடத்தியவர் தன்னையும், நடக்க இருக்கும் மிகப்பெரிய இயக்கத்தையும் தடுக்கும் நோக்கம் கொண்டு இருந்ததாக பேசினார்.
ட்ரம்ப் பிரசாரத்தில் எலான் மஸ்க்
இந்நிலையில், டிரம்பின் இந்த தேர்தல் பிரசாரத்தில் உலகின் முன்னணி பணக்காரரும், டெஸ்லா, ஸ்பேஸ் X ஆகியவற்றின் தலைவருமான எலான் மஸ்க் குடியரசு கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
Elon Musk: Trump must win election and become president to preserve democracy in the U.S
— NEXTA (@nexta_tv) October 6, 2024
He said Democrats want to "take away free speech" and "the right to bear arms." pic.twitter.com/ZhSiJmm0ME
அப்போது, அமெரிக்காவின் ஜனநாயகத்தை பாதுகாக்க நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனநாயக கட்சியினர் அமெரிக்க மக்களிடம் இருந்து, பேச்சுரிமையையும், ஆயுதம் வைத்து இருப்பதற்கான உரிமையையும் பறிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |