கல்லூரி கட்டணம் குறித்து கவலைப்படும் உலக பணக்காரர் எலான் மஸ்க் மகள்
மக்கள் நினைப்பது போல் என்னிடம் பணம் இல்லை என எலான் மஸ்க் மகள் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
393.1 பில்லியன் டொலர் சொத்துமதிப்புடன், உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எலான் மஸ்க்.
இவர், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ், நியூராலிங்க் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
எலான் மஸ்க்கிற்கு 4 மனைவிகள் மற்றும் 12 குழந்தைகள் உள்ளதாக அறியப்படுகிறது.
எலான் மஸ்க்கின் முதல் குழந்தை என கூறப்படும் சேவியர் அலெக்சாண்டர் மஸ்க், 18 வயதான பின்னர் தான் பெண்ணாக மாறி விட்டதாக கூறி தனது பெயரை விவியன் என மாற்றிக்கொண்டார்.
தற்போது எலான் மஸ்க்கிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வரும் அவர், தான் பாலினம் மாறியதை தனது தந்தை விரும்பவில்லை என எலான் மஸ்க் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.
கல்லூரி கட்டணம்
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், வெளிநாட்டு மொழிகளை கற்க கல்லூரிக்கு செல்ல விரும்புவதாகவும், ஆனால் கல்வி கட்டணம் குறித்து கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் என்னிடம் நிறைய பணம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் என்னிடம் அப்படி பணம் இல்லை. நான் என்னுடைய நிதி தேவைக்காக என் தாய் வில்சனை சார்ந்திருக்க விரும்பவில்லை.
நான் சூப்பர் பணக்காரராக இருக்க வேண்டும் என்ற லட்சியம் எனக்கு இல்லை. உணவுக்கு செலுத்த போதுமான பணம் உள்ளது. 3 நண்பர்களுடன் அறையை பகிர்ந்து வசித்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |