தடையின்றி மின்சாரம்... உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய எலான் மஸ்க்!
உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ரஷ்யா படையெடுப்பை எதிர்த்து போராடி வரும் உக்ரைனுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்டியுள்ளார்.
ரஷ்யாவின் சரமாரி தாக்குதல்களால் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ள உக்ரைன், குறிப்பாக சுகாதார மையங்களில் தடையின்றி மின்சாரம் விநியோகிக்க போராடி வருகிறது.
இந்நிலையில், கீவ் அருகே உள்ள மருத்துவ சேவை மையங்களில் தடையின்றி மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய, எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்திலிருந்து சோலார் பேனல்களை உக்ரைனுக்கு நன்கொடையாக அளித்துள்ளார்.
இன்று எலான் மஸ்க் அனுப்பிய சோலார் பேனல்கள் கிடைத்ததாகவும், அவை இர்பின் மற்றும் போரோடியங்காவில் உள்ள சுகாதார மையங்களில் பயன்படுத்தப்படும் என உக்ரைன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
நீர்மூழ்கிக் கப்பலிருந்து ஏவுகணைகளால் உக்ரைனை தாக்கி உலுக்கிய ரஷ்யா! வீடியோ ஆதாரம்
அதேசமயம், ஸ்பெயின் மற்றும் பெல்ஜியத்திலிருந்து அனுப்பப்பட்ட மருத்துவ உபகரணங்கள் கிடைத்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, உக்ரைன் துணை பிரதமரின் வேண்டுகோளை ஏற்ற எலான் மஸ்க் வெறும் 10 மணி நேரத்தில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை உக்ரைனுக்கு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.