நீர்மூழ்கிக் கப்பலிருந்து ஏவுகணைகளால் உக்ரைனை தாக்கி உலுக்கிய ரஷ்யா! வீடியோ ஆதாரம்
நீர்மூழ்கிக் கப்பலிருந்து உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதற்கான வீடியோ ஆதாரத்தை ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலானது உக்ரைன் ராணுவ இலக்குகளை கலிப்ர் ஏவுகணை மூலம் தாக்க பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் பகிர்ந்துள்ள காணொளியில், ஏவுகணைகள் சரமாரியாக கடலில் இருந்து ஏவப்பட்டு உக்ரைனை நோக்கி சீறிச் சென்றதை காண முடிகிறது.
இந்த ஏவுகணைகள் உக்ரைன் ராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரேனிய இலக்குகளுக்கு எதிராக நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்களைப் பயன்படுத்தியதாக ரஷ்யாவின் ராணுவம் அறிக்கை வெளியிடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Russian MoD video showing a Black Sea Fleet Project 636.3 diesel electric submarine launching Kalibr cruise missiles at Ukraine.https://t.co/RsWcZ7rJgx pic.twitter.com/6DQ0JmOF8T
— Rob Lee (@RALee85) April 29, 2022
கைகளை பாக்கெட்களில் வைத்துக் கொள்ளுங்கள்! பிரித்தானியா ஆண் எம்.பி-களுக்கு புத்திசொன்ன பெண் எம்.பி!
சமீபத்தில் மாஸ்க்வா போர்க்கப்பல் மூழ்கியபோது கருங்கடலில் ரஷ்யாவின் கடற்படை பெரும் பாதிப்பை சந்தித்தது, இதற்கு உக்ரைன் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.