அமெரிக்க நீதிபதிகள் மீது விமர்சனங்கள்! நிதியுதவி வழங்கி சர்ச்சையில் எலான் மஸ்க்
அமெரிக்க நீதிபதிகளை விமர்சிப்பவர்களுக்கு எலான் மஸ்க் நிதியுதவி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்புக்கு எதிரான வழக்கு
2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டார். அப்போது ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், ட்ரம்புடன் தனக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.
இந்த விவகாரத்தை மூடி மறைக்க டிரம்ப் தனது வழக்கறிஞர் மூலம் ஸ்டார்மி டேனியல்ஸுக்கு ரூ.1 கோடி வழங்கியதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ட்ரம்ப் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அமெரிக்க நீதிபதிகள் மீது விமர்சனங்கள்!
ஆனால், அவர் ஜனாதிபதியாக இருப்பதால் அவருக்கு அபராதமோ, தண்டனையோ விதிக்கப்படவில்லை.
அப்போது இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜுவான் மெர்சனுக்கு சமூக வலைதளங்களில் மிரட்டல்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன.
மேலும், ட்ரம்ப் எடுக்கும் முடிவுகளைத் தடுக்கும் வகையில் உத்தரவுகளைப் பிறப்பிக்கும் நீதிபதிகளுக்கும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
நிதியுதவி வழங்கி சர்ச்சையில் எலான் மஸ்க்
இந்நிலையில், டிரம்புக்கு எதிரான நீதிபதிகளை விமர்சிக்கும் நபர்கள் மற்றும் குழுக்களுக்கு எலான் மஸ்க் தாராளமாக நிதியுதவி வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, எலான் மஸ்க் தாராளமாக நிதியுதவி வழங்கியதாகவும், இதுவரை அவர் ரூ.5.41 லட்சத்தை வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
நீதிபதிகளுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்கும் நபர்களுக்கு தலா ரூ.8,600 வழங்கி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெஸ்லா கார்களை சேதப்படுத்தினால் சிறை
அமெரிக்காவில் சாலைகள் மற்றும் வீதிகளில் நிறுத்தப்பட்டுள்ள எலான் மஸ்க்கின் டெஸ்லா கார்களை மர்ம நபர்கள் சேதப்படுத்தி வருகின்றனர். இந்த செயலுக்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா கார்களை சேதப்படுத்துவது தீவிரவாதத்திற்கு ஒப்பானது என்றும், அவ்வாறு செய்பவர்களை எல் சால்வடார் நாட்டு சிறைக்கு அனுப்புவேன் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |