கார் கேரேஜில் இரவு தூங்கும் உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரின் தாயார்! ஏன் தெரியுமா?
எலான் மஸ்கை காண சென்றால் கார் கேரேஜில் தான் தங்குவேன் என கூறும் அவர் தாயார்.
உலக பணக்காரர் குறித்து கூறியுள்ள ஆச்சரிய தகவல்கள்
உலகின் நம்பர் 1 கோடீஸ்வரரான எலான் மஸ்கை பார்க்க சென்றால் கார் கேரேஜில் தான் தூங்குவேன் என்ற ஆச்சரிய தகவலை அவரின் தாயார் வெளியிட்டுள்ளார்.
எலான் மஸ்கின் தாயார் பெயர் மயி மஸ்க் (74). அவர் அளித்துள்ள பேட்டியில், டெக்சாஸில் எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் குடியிருப்புக்கு சென்றால் கூட நான் கார் நிறுத்தும் கேரேஜ் இடத்தில்தான் தூங்குவது வழக்கம். ராக்கெட் விடும் இடத்தில் சொகுசான வீட்டை எதிர்பார்க்க முடியாது.
ANI
எலானைப் போல் செவ்வாய்கிரகத்துக்கு செல்வதில் எல்லாம் எனக்கு விருப்பம் கிடையாது.உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரனாக எனது மகன் (எலான் மஸ்க்) இருந்தாலும் அதில் அவனுக்கு பெரிய நாட்டமில்லை
ஆனால் எனது பிள்ளைகள் விரும்பினால் அதை செய்வேன்.
அவர் படித்த அனைத்தையும் நினைவில் வைத்து கொள்வார். எலான் எப்போதும் புதிய விடயத்தை தெரிந்து கொள்ள விரும்புவார்.