புதிய அரசியல் கட்சி தொடங்குவது எப்போது? எலான் மஸ்க் முக்கிய அறிவிப்பு
புதிய அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பான அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
வரி மற்றும் செலவு மசோதா
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்தும், வரி மற்றும் செலவு மசோதாவுக்கு(big beautiful bill) உலக பணக்காரர் எலான் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதன் காரணமாக நெருக்கமாக இருந்த டிரம்பிற்கும், எலான் மஸ்க்கிற்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.
தற்போது, இந்த மசோதா அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், எலான் மஸ்க் இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வரி மற்றும் செலவு மசோதா, வரலாற்றில் மிகப்பெரிய கடன் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். இந்த மசோதாவுக்கு வாக்களித்த ஒவ்வொரு உறுப்பினரும் வெட்கத்தால் தலைகுனிய வேண்டும்.
Every member of Congress who campaigned on reducing government spending and then immediately voted for the biggest debt increase in history should hang their head in shame!
— Elon Musk (@elonmusk) June 30, 2025
And they will lose their primary next year if it is the last thing I do on this Earth.
இந்த பூமியில் நான் செய்யும் கடைசி விஷயம் இதுவாக இருந்தால், அடுத்த ஆண்டு அவர்கள் தங்கள் முதன்மைத் தேர்வை இழப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் கட்சி
முன்னதாக, 80% அமெரிக்கா மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய கட்சி தொடங்கும் நேரம் இதுவா? என எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் ஒரு கருத்துக்கணிப்பை தொடங்கினார்.
அந்த கருத்து கணிப்பில் 56 லட்சத்திற்கு அதிகமானோர் வாக்களித்துள்ள நிலையில், 80.4% பேர் புதிய கட்சி தொடங்கலாம் என தெரிவித்துள்ளனர்.
If this insane spending bill passes, the America Party will be formed the next day.
— Elon Musk (@elonmusk) June 30, 2025
Our country needs an alternative to the Democrat-Republican uniparty so that the people actually have a VOICE.
தற்போது, "இந்த செலவு மசோதா நிறைவேறினால், அடுத்த நாள் The America Party என்ற புதிய கட்சி உருவாகும். மக்களுக்கு குரல் கொடுப்பதற்காக, ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சிக்கு மாற்றாக ஒரு கட்சி தேவை" என மஸ்க் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |