விரைவில் இந்தியாவுக்கு வருகை தரும் எலான் மஸ்க்: பிரதமர் மோடியுடன் உரையாடல்!
இந்தியாவுக்கு விரைவில் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் இந்திய வருகை
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) எலான் மஸ்க், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சமீபத்தில் தொலைபேசியில் உரையாடினார்.
இந்த உரையாடலை தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவிற்கு வருகை தர விரும்புவதாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி - எலான் மஸ்க் உரையாடல்
வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த தொலைபேசி உரையாடல், இரு தலைவர்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டனில் சந்தித்தபோது விவாதித்த தொழில்நுட்பம் மற்றும் புதுமை (innovation) சார்ந்த பல்வேறு விஷயங்களை மையமாகக் கொண்டிருந்தது.
குறிப்பாக, இந்திய தொழில்நுட்ப சந்தையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் முதலீடு மற்றும் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "எலான் மஸ்க்குடன் உரையாடினேன். தொழில்நுட்பம் மற்றும் புதுமைப் துறைகளில் ஒத்துழைப்பிற்கான பெரும் வாய்ப்புகள் குறித்து விவாதித்தோம்" என்று பதிவிட்டார்.
இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், "பிரதமர் மோடியுடன் உரையாடியது பெருமைக்குரியது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவுக்குச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |