ஏழை சிறார்களைக் கொல்லும் எலோன் மஸ்க்... பில் கேட்ஸ் பகீர் குற்றச்சாட்டு
டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க் ஏழைக் குழந்தைகளைக் கொன்று வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மீண்டும் எழும் அபாயம்
அடுத்த 20 ஆண்டுகளுக்குள் தனது சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்குவதாகவும், கேட்ஸ் அறக்கட்டளை 2045 ஆம் ஆண்டுக்குள் செயல்பாடுகளை நிறுத்துவதாகவும் பில் கேட்ஸ் அறிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் வெளிநாட்டு உதவிகளை விநியோகிக்கும் பொறுப்பான அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்திற்கு மஸ்க் சமீபத்தில் நிதி குறைப்புகளை மேற்கொண்டது தொடர்பில் பில் கேட்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அந்த நிறுவனம் மூடப்பட்டதை விமர்சித்துள்ள பில் கேட்ஸ், தட்டம்மை, எச்.ஐ.வி மற்றும் போலியோ போன்ற நோய்கள் மீண்டும் எழும் அபாயத்தை எலோன் மஸ்க் ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
200 பில்லியன் டொலர்
உலகில் உள்ள ஏழைக் குழந்தைகளைக் கொல்லும் எலோன் மஸ்கின் செயல் சிறப்பான ஒன்றல்ல என கேட்ஸ் தெரிவித்துள்ளார். நிதியுதவியைக் குறைத்ததால், தற்போது எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை எலோன் மஸ்க் சென்று சந்திக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் எனவும் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது அறக்கட்டளை டிசம்பர் 31, 2045 க்குள் செயல்பாடுகளை நிறுத்தப்போவதாகக் கூறினார். தனது அறக்கட்டளை ஏற்கனவே 100 பில்லியன் டொலருக்கும் அதிகமாக நன்கொடை அளித்துள்ளதாகவும்,
அடுத்த இருபது ஆண்டுகளில் மேலும் 200 பில்லியன் டொலர்களை நன்கொடையாக அளிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கேட்ஸ் கூறியுள்ளார். பில் கேட்ஸின் தனிப்பட்ட சொத்து மதிப்பு என்பது 168 பில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |