கடைசி ஒரு நாளில் ரூ.1,08,836 கோடி சொத்தை இழந்த Elon Musk., 2023ல் மட்டும் கிடைத்த சொத்து எவ்வளவு?
வெள்ளியன்று, உலகின் மிகப் பாரிய பணக்காரரான எலோன் மஸ்க்கின் சொத்து மதிப்பு 3.36 பில்லியன் டொலர் குறைந்துள்ளது.
முன்னதாக வியாழன் அன்றும் அவரது சொத்து மதிப்பு 5 பில்லியன் டொலர்களுக்கு மேல் சரிந்தது. இருப்பினும், இந்த ஆண்டு Elon Musk அதிக வருவாயில் முதலிடத்தில் உள்ளார்.
Elon Musk சொத்து மதிப்பு 2023
2023-ஆம் ஆண்டு அவரது சொத்து மதிப்பு 92 பில்லியன் டொலர்கள் (இலங்கை பணமதிப்பில் ரூ.29,80,030 கோடி) அதிகரித்தது.
இந்நிலையில், Bloomberg Billionaires Index-ன்படி எலோன் மஸ்க் 229 Billion Dollars (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 74,17,683 கோடி) சொத்து மதிப்புடன் உலகின் மிகப் பாரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இந்தப் பட்டியலில், பிரெஞ்சு தொழிலதிபர் Bernard Arnault 179 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு 17 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.
முதல் 10 இடங்களில் இருப்பவர்கள்
இந்தப் பட்டியலில் Amazon நிறுவனர் Jeff Bezos (177 பில்லியன் டாலர்) மூன்றாவது இடத்தில் உள்ளார். Microsoftன் Bill Gates ($141 பில்லியன்) நான்காவது இடத்திலும், Steve Ballmer ($131 பில்லியன்) ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.
அவர்களைத் தொடர்ந்து, FaceBookன் Mark Zuckerberg ($128 பில்லியன்) ஆறாவது இடத்திலும், Larry Page ($126 பில்லியன்) ஏழாவது இடத்திலும், Larry Ellison ($123 பில்லியன்) எட்டாவது இடத்திலும், Sergey Brin ( $120 பில்லியன்) ஒன்பதாவது இடத்திலும், Warren Buffett ($120 பில்லியன்) பத்தாவது இடத்திலும் உள்ளனர்.
இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பாரிய பணக்காரரான முகேஷ் அம்பானி 96.3 பில்லியன் டொலர்களுடன் 13வது இடத்தில் உள்ளார். இந்த ஆண்டு அவரது சொத்து மதிப்பு 9.23 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Elon Musk Net Worth, Elon Musk 2023 Net Worth, Elon Musk 2023 Profit, Elon Musk Loss, Worlds Richest Person in 2023, Bloomberg Billionaires Index, Top 10 Billionaires list