வெடித்து சிதறிய உலகின் மிகப்பெரிய ராக்கெட்: சோதனை முயற்சிக்கு எலோன் மஸ்க் வாழ்த்து: வீடியோ
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான சோதனை முயற்சி ஏவப்பட்ட சில நிமிடங்களில் தோல்வியில் முடிந்தது.
உலகின் மிகப்பெரிய ராக்கெட்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மைல்கல் முயற்சியாக இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகளிலேயே மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராக்கெட்டை இன்று விண்ணில் ஏவியது.
அமெரிக்காவின் தெற்கு டெக்சாஸில் உள்ள போகா சிகாவிலிருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அருகில் இருந்து ராக்கெட் ஏவுதலை பார்வையிட்டனர்.
Liftoff from Starbase pic.twitter.com/rgpc2XO7Z9
— SpaceX (@SpaceX) April 20, 2023
ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக வானத்திற்கு எடுத்து செல்லப்பட்ட ராக்கெட் அமைப்பு திட்டமிட்டபடி பிரிக்கத் தவறியது, மேலும் நான்கு நிமிடங்களுக்குள் அதன் விமானம் வெடித்து சிதறியது, இதனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய ராக்கெட் அதன் சுற்றுப் பாதையை அடைய தவறிவிட்டது.
அத்துடன், முதல் கட்டத்தை வெற்றிகரமாக தாண்டிய ராக்கெட், இரண்டாம் கட்டத்தில் தோல்வியை சந்தித்ததாக அறிவிக்கப்பட்டது.
120 மீ உயரத்தில் சாதனை படைத்துள்ள இந்த ராக்கெட், இணைந்த 33 ராக்கெட் என்ஜின்களை கொண்ட கிராஃப்ட் மற்றும் பூஸ்டர் அமைப்புகளை கொண்டுள்ளது.
First fully integrated Starship lifting off for the first time! pic.twitter.com/FlK3Rbgvmi
— SpaceX (@SpaceX) April 20, 2023
தவறுகள் சரி செய்யப்படும்
இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், பரபரப்பான துவக்க சோதனை முயற்சிக்காக குழுவை வாழ்த்தினார்.
அத்துடன் சில மாதங்களில் அடுத்தக்கட்ட சோதனை ஏவுதலுக்காக நிறைய கற்றுக்கொண்டேன் என்றும் வியாழக்கிழமை நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு எலான் மஸ்க் ட்வீட் செய்துள்ளார்.
SpaceX has released the findings of what happened. The learnings are the most important part.
— Tesla Owners Silicon Valley (@teslaownersSV) April 20, 2023
“The vehicle experienced multiple engines out during the flight test, lost altitude, and began to tumble.” pic.twitter.com/lB6nk8j3eV
What a perfect visual metaphor for everything Elon Musk does #SpaceX
— Tara Dublin ((Got ?ℯ????ℯ? in 2016)) (@taradublinrocks) April 20, 2023
pic.twitter.com/XY2TtOwWvP
Sky News