ChatGPT சாம் ஆல்ட்மேன் மீது எலோன் மஸ்க் வழக்குப்பதிவு
ChatGPT தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனுக்கு எதிராக எலோன் மஸ்க் வழக்குப்பதிவு செய்துள்ளார்.
Tesla தலைமைச் செயல் அதிகாரி எலோன் மஸ்க் (Elon Musk), ChatGPT டெவலப்பர் OpenAI மற்றும் அதன் தலைமைச் செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
மனிதகுலத்தின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவை உருவாக்கும் நிறுவனத்தின் அசல் இலக்கை நிறுவனம் கைவிட்டதாக மஸ்க் குற்றம் சாட்டினார்.
விழக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கில், சாம் ஆல்ட்மேன் மற்றும் OpenAI இணை நிறுவனர் க்ரெக் ப்ரோக்மேன் (Greg Brockman), ஒரு இலாப நோக்கமற்ற, அணுகக்கூடிய செயற்கை நுண்ணறிவை உருவாக்க முதலில் தன்னை அணுகியதாக மஸ்க் கூறினார்.
ஆனால் இந்த நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்..
GPT-4 வடிவமைப்பு முற்றிலும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மஸ்க் 2015-இல் OpenAI இன் நிறுவனர்களில் ஒருவராக இருந்தார். அவர் 2018-இல் அதன் குழுவிலிருந்து விலகினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Open AI ChatGPT, Elon Musk, Billionaire Elon Musk sued OpenAI CEO Sam Altman