ஐரோப்பாவில் டெஸ்லா விற்பனை 50 சதவீதம் சரிவு
எலோன் மஸ்கின் டெஸ்லா விற்பனை ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைந்துள்ளது.
முன்னணி மின்சார கார் பிராண்டான டெஸ்லா (Tesla), 2025 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் ஐரோப்பிய ஒன்றிய (EU) சந்தையில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஏசி.இ.ஏ (ACEA) வெளியிட்ட தகவலின்படி, 19,046 புதிய டெஸ்லா வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன, இது கடந்த ஆண்டை விட 49% குறைவு.
மின்சார கார்கள் மீது மொத்தம் 28.4% அதிகரித்துள்ள விற்பனை டெஸ்லாவுக்கு மட்டும் எதிர்மறையாக அமைந்துள்ளது.
ஐரோப்பிய சந்தையில் சீன மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் புதிய மொடல்களுடன் போட்டியை அதிகரித்துள்ளன. மேலும், எலோன் மஸ்கின் அரசியல் கருத்துகள் மற்றும் பழைய மொடல்கள், விற்பனை குறைவதற்கான காரணங்களாக கருதப்படுகின்றன.
ஜேர்மனியில் 76% வீழ்ச்சி!
மஸ்க் ஜேர்மனியின் வலதுசாரி கட்சிக்கு ஆதரவளித்ததால், நுகர்வோரிடையே எதிர்ப்பு உருவாகியுள்ளது. ஜேர்மனியில் டெஸ்லா விற்பனை 76% குறைந்துள்ளது.
கூடுதலாக, சில டெஸ்லா வாகனங்கள் தீ வைத்து அழிக்கப்படுவதும், அமெரிக்காவில் டெஸ்லா ஷோரூம்கள் தாக்குதல் சந்திப்பதும் டெஸ்லாவின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
மொத்தமாக, டெஸ்லாவின் சந்தைப் பங்கு 1.1% ஆக சரிந்துள்ளது. புதிய மாற்றங்கள் இல்லாத பழைய மொடல்கள், மின்சார கார்களின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள், மற்றும் Cybertruck Recall பிரச்சினை போன்றவை விற்பனையை மேலும் பாதித்திருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |