ஒப்பந்தத்தில் இருந்து விலகி விடுவேன்...ட்விட்டருக்கு எலான் மஸ்க் எழுதிய எச்சரிக்கை கடிதம்
போலி கணக்குகள் குறித்த முழுமையான தகவலை தரவில்லை என்றால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் திட்டத்தை கைவிட்டு விடுவேன் என எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் முதன்மை பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அறிவித்து இருந்தார்.
ஆனால் ட்விட்டரில் உள்ள போலி கணக்குகளின் தரவுகளை முழுமையாக அந்த நிறுவனம் ஒப்படைய வேண்டும் என நிபந்தனை விதித்து இருந்தார். இருப்பினும் இதுவரை ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் பற்றிய தரவுகளை ட்விட்டர் நிறுவனம் வழங்காததால், இந்த ஒப்பந்தத்தை கடந்த மார்ச் மாதத்தில் நிறுத்தி வைப்பதாக எலான் மஸ்க் அறிவித்தார்.
இந்தநிலையில், டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் எலான் மஸ்ஜ் ட்விட்டர் நிறுவனத்திற்கு புதிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்த தரவை முழுவதுமாக வழங்க தவறினால் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவேன் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
மேலும் இணைப்பு ஒப்பந்ததின் கீழ் ட்விட்டர் தனது கடமைகளை செய்ய வெளிப்படையாக மறுகிறது, போலிக் கணக்குகளின் தரவுகளில் எலான் மஸ்கின் பகுப்பாய்வு நிறுவனம் எதைக் கண்டறியும் என்ற கவலையில் ட்விட்டர் நிறுவனம் தரவுகளை தர அஞ்சுகி்றது என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: வாக்கெடுப்பிற்கு முன்னால்...நான் உங்களுக்காக வெற்றி பெறுவேன்: எம்.பிகள் மத்தியில் போரிஸ் பேச்சு!
அத்துடன் இந்த கடிதத்தில், ட்விட்டர் தனது கடமைகளில் இருந்து தவறினால் இணைப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் எலான் மஸ்கிற்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.