தூதரகங்களை மூடுவதா... மேற்கத்திய நாடுகளை கடுமையாக சாடிய உக்ரைன்
உக்ரைனுக்குள் நெருக்கடியை ஏற்படுத்த வேண்டாம் என தமது மேற்கத்திய நட்பு நாடுகளை உக்ரைன் கேட்டுக்கொண்டுள்ளது.
வான் தாக்குதல் உறுதி
இத்தாலி, கிரேக்கம், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் திடீரென்று உக்ரைன் தலைநகரில் அமைந்துள்ள தங்கள் தூதரகங்களை மூடிவிடுவதாக அறிவித்த நிலையிலேயே உக்ரைன் பதிலளித்துள்ளது.
உக்ரைன் தலைநகர் மீது உக்கிரமான வான் தாக்குதல் முன்னெடுக்கப்படும் அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டே பல நாடுகள் தங்கள் தூதரகங்களை மூட முடிவு செய்தது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் திடீர் முடிவால், உக்ரைன் முதல் முறையாக ரஷ்யாவுக்குள் அமெரிக்க ஏவுகணைகளைப் பயன்படுத்தி தாக்குதல் முன்னெடுத்தது. பதிலடியாக உக்ரைன் மீது ஏவுகணைத் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த களேபரங்களுக்கு நடுவே, முதல் நாடாக அமெரிக்காவே தூதரகத்தை மூடுவதாக அறிவித்தது. உக்ரைன் தலைநகர் மீது வான் தாக்குதல் உறுதி என தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் விளக்கமளித்தது.
பதற்றமடையச் செய்யும் நோக்கம்
இதனையடுத்து வரிசையாக கிரேக்கம், ஹங்கேரி, இத்தாலி, ஸ்பெயின் மற்றும் நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்தும் தங்கள் தூதரகங்களை மூடுவதாக அறிவித்தது.
இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ள உக்ரைன் உயர் அதிகாரிகள், நாட்டுக்குள் அச்சத்தையும் அமைதியின்மையையும் ஏற்படுத்தும் வகையில் உலக நாடுகள் நடந்துகொள்ள வேண்டாம் என்றும் வலியுறுத்தினர்.
அமெரிக்கா குறிப்பிட்டும் தாக்குதல் என்பது ரஷ்யாவின் உளவியல் முன்னெடுப்பாக இருக்கலாம் என்றும், உக்ரைன் மக்களை மேலும் பதற்றமடையச் செய்யும் நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், தூதரகம் மூடுவதாக அறிவித்துள்ள அமெரிக்கா, அந்த முடிவினை திரும்பப் பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |