13 மணி நேரம் பயணம் செய்து புறப்பட்ட இடத்துக்கே திரும்பிய விமானம்.! எதிர்பாராத சம்பவம்
துபாயிலிருந்து நியூசிலாந்து நோக்கி புறப்பட்ட விமானம் 13 நேரம் பயணித்து மீண்டும் துபாயிலேயே தரையிறங்கியது.
துபாயில் இருந்து நியூசிலாந்துக்கு சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன் பயணிகளுக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை காலை துபாயில் இருந்து புறப்பட்ட விமானம் 13 மணி நேரம் பறந்து மீண்டும் துபாயில் தரையிறங்கியது. வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவம் தாமதமாக வெளிச்சத்திற்கு வந்தது.
துபாயில் இருந்து புறப்பட்டு நியூசிலாந்தின் ஆக்லாந்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. துபாய் - ஆக்லாந்து இடையேயான பயண தூரம் 16 மணி நேரம் ஆகும்.
ஆனால் ஆக்லாந்து விமான நிலையத்தில் வெள்ளம் புகுந்ததால் அதிகாரிகள் விமான நிலையத்தை மூடினர். தகவல் கிடைத்ததும் விமானி விமானத்தை திசை திருப்பி துபாயில் தரையிறக்கினார்.
Getty
இந்த சம்பவம் குறித்து ஆக்லாந்து விமான நிலைய அதிகாரிகள் பதிலளித்தனர். இது கோபத்தை ஏற்படுத்தினாலும், பயணிகளின் பாதுகாப்பு தங்களுக்கு மிகவும் முக்கியம் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
EK448 விமானம் துபாயில் இருந்து வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு புறப்பட்டது. ஏறக்குறைய 9,000 மைல்கள் பறந்த பிறகு, விமானி விமானத்தை திருப்பி மீண்டும் துபாயில் தரையிறக்கினார்.
நியூசிலாந்தில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. விமான நிலையம் தண்ணீரால் நிரம்பியது. இதனால், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கனமழை காரணமாக ஆக்லாந்துக்கு விமானம் ரத்து செய்யப்பட்ட நிலையில் நிலைமை சற்று சீரடைந்ததையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை எமிரேட்ஸ் விமானம் மீண்டும் துபாயில் இருந்து புறப்பட்டது. இந்த முறை 16 மணி நேரம் பயணித்த விமானம் நியூசிலாந்தில் பத்திரமாக தரையிறங்கியது.