லொட்டரியில் ரூ.7.8 கோடி வென்ற ஊழியர்.., பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட நிறுவனம்
நிறுவன விழா ஒன்றில் ஊழியர் ஒருவருக்கு லொட்டரி டிக்கெட்டில் ரூ.7.8 கோடி பரிசுத்தொகை விழுந்துள்ளது.
ரூ.7.8 கோடி பரிசு
கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் நிங்போ நகரில் உள்ள நிறுவனம் ஒன்றில், சீனர் ஒருவர் லொட்டரியில் ரூ.7.8 கோடி பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
இந்த சம்பவத்தில் நிறுவனம் ஒன்று உள்ளூரில் உள்ள கடையிலிருந்து 500க்கும் மேற்பட்ட லொட்டரி சீட்டுகளை வாங்கியது. பின்னர், ஒவ்வொரு ஊழியர்களுக்கும் லொட்டரி டிக்கெட் வழங்கப்பட்டது.
இதில் பெயர் குறிப்பிடாத ஊழியர் ஒருவர் 6 மில்லியன் யுவான் மதிப்புள்ள லொட்டரி பரிசை வென்றார். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 7.8 கோடியாகும்.
இந்த சம்பவம் சக ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், வெற்றி பெற்ற பரிசை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வெற்றி பெற்ற ஊழியரிடம் நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆனால், பணத்தை திருப்பி தருவதற்கு ஊழியர் மறுத்து விட்டார். பின்னர் காவல்துறை உதவியை நிறுவனம் நாடியது. இந்த பிரச்சனையை நிவர்த்தி செய்ததாகவும் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் லொட்டரி டிக்கெட் விநியோகம் செய்வதற்கு 2 நாட்கள் முன்னதாகவே டிக்கெட் குலுக்கல் நடைபெற்றது.
அதாவது, பிப்ரவரி 28-ம் திகதி அன்று லொட்டரி குலுக்கல் நடைபெற்றது. அதன் பிறகு மார்ச் 2-ம் திகதி தான் டிக்கெட் விநியோகிக்கப்பட்டது.
வெற்றி பெற்ற டிக்கட்டுகள் யாரிடமும் கிடைக்காதவாறு டிக்கெட் விநியோகம் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது.
இதில் கவனக்குறைவின் காரணமாக ஒரு ஊழியர் கையில் வெற்றி பெற்ற லொட்டரி டிக்கெட் கிடைத்ததாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |