பிரித்தானியாவில் திங்கட்கிழமை பணிக்கு வராத தொழிலாளி பணி நீக்கம்: 3 லட்சம் நஷ்ட ஈடு வழங்கிய முதலாளி
பிரித்தானியாவில் திங்கட்கிழமை வேலைக்கு வராத தொழிலாளியை பணி நீக்கம் செய்த முதலாளியை 3 லட்சம் நஷ்ட ஈடு வழங்க சொல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ஆச்சரியமான ஒன்றாகப் பேசப்படுகிறது.
வேலையை விட்டு நீக்கிய முதலாளிக்கு அபராதம்
செலின் தோர்லி(25) என்ற பெண்மணி கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்டியன் டோனெல்லியின் என்பவரின் முடி திருத்தும் கடையில் முடி திருத்துபவராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு மேல் அவர் அங்கு பணிபுரிந்து வரும் நிலையில் அவர் கடந்த திங்கட்கிழமை அன்று பணிக்கு வராமல் இருந்ததால், கிறிஸ்டியன் டோனெல்லி தனது கடையில் இருந்து அவரை பணி நீக்கம் செய்துள்ளார்.
ஆனால் நீதிமன்றம் அவரை பணி நீக்கம் செய்ததற்காக நஷ்ட ஈடாக 3 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது.
பார்ட்டி கொண்டாடுவது தான் காரணம்
கடந்த வெள்ளிக்கிழமை செலின் தோர்லி வேலையை விட்டு கிளம்பும் போது திங்கள் கிழமை பணிக்குக் கட்டாயம் வர வேண்டும் என எச்சரித்து அனுப்பியுள்ளார்.
ஆனால் அவர் பணிக்கு வராமல் தனது முதலாளியான கிறிஸ்டியன் டோனெல்லிக்கு “எனக்கு உடல்நிலை சரியில்லை.. என்னால் பணிக்கு வர முடியாது” என குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முதலாளி “ நீ தொடர்ந்து திங்கட்கிழமை பணிக்கு வராமல் இருக்க காரணம் ஞாயிற்றுக்கிழமை பார்ட்டி கொண்டாடுவது தான்” எனத் தொழிலாளியை திட்டியுள்ளார். மேலும் அவரை இனிமேல் பணிக்கு வரக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
உடல் நலம் சரியில்லாதவரை வற்புறுத்துவது குற்றம்
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செலின் தோர்லி நீதிமன்றத்தில் தனது முதலாளிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரிக்கையில் செலின் தோர்லி கடந்த நான்கு வருடங்களில் பல திங்கட்கிழமைகள் விடுப்பு எடுத்துள்ளார், அதனால் தான் நான் அவரை பணி நீக்கம் செய்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முழு காரணம் அவர் ஞாயிறுகளில் பாராட்டிக் கொண்டாடுவது தான் என செலின் தோர்லி மீது குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் நீதிமன்றம் உடல் நலமில்லாத ஒருவரால் பணிக்கு வர முடியாதது குற்றமல்ல. எனவே அவரை பணி நீக்கம் செய்ததற்காக செலின் தோர்லிக்கு அவரது முதலாளி ரூ 3 லட்சம் வழங்க வேண்டுமென தீர்ப்பளித்துள்ளது.