ஆப்பிரிக்க பென்குயின் பாதுகாப்பு: தென்னாப்பிரிக்க நீதிமன்றத்தின் வரலாற்று தீர்ப்பு!
ஆப்பிரிக்க பென்குயின்களை பாதுகாப்பு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
ஆப்பிரிக்க பென்குயின் பாதுகாப்பு
தென்னாப்பிரிக்காவில், அழிவின் விளிம்பில் உள்ள ஆப்பிரிக்க பென்குயின்களின் இனப்பெருக்கத் தலங்களைப் பாதுகாக்க, ஒரு வரலாற்று சிறப்புமிக்க சட்ட வெற்றி கிடைத்துள்ளது.
நீதிமன்றத்திற்கு வெளியே ஏற்பட்ட உடன்பாட்டின் விளைவாக, ஆறு முக்கிய பென்குயின் காலனிகளை சுற்றி மீன்பிடி தடை செய்யப்பட்ட பகுதிகளை அடுத்த பத்து ஆண்டுகளுக்கு உருவாக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆப்பிரிக்க பென்குயின் இனம் ஆண்டுக்கு சுமார் 8% வீழ்ச்சியடைந்து வருவதாகவும், ஒரு தசாப்தத்திற்குள் அழிந்து போகக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்ததை அடுத்து, இந்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க பென்குயின் எண்ணிக்கை வீழ்ச்சி
2018 ஆம் ஆண்டில் சுமார் 15,000 ஆக இருந்த எண்ணிக்கை, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 9,000 க்கும் குறைவாக குறைந்துள்ளது.
இந்த வீழ்ச்சி விகிதம் தொடர்ந்தால், 2035 ஆம் ஆண்டளவில் ஆப்பிரிக்க பென்குயின் அழிவை எதிர்கொள்ளக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மண்டலங்கள்
டேசன் தீவு, ராபன் தீவு, ஸ்டோனி பாயிண்ட், டைர் தீவு, செயின்ட் க்ரோயிக்ஸ் தீவு மற்றும் பறவை தீவு ஆகிய இடங்களைச் சுற்றி பாதுகாக்கப்பட்ட மண்டலங்களை நிறுவுகிறது.
இந்த முக்கியமான பகுதிகளில், மத்தி மற்றும் நெத்திலி மீன்களைப் பிடிக்கும் பர்ஸ் சீன் மீன்பிடி கப்பல்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
வணிக மீன்பிடித் துறையால் பெரிதும் இலக்கு வைக்கப்படும் பென்குயின்களின் அத்தியாவசிய உணவு ஆதாரங்களை அவை அணுகுவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |