உக்ரைனில் 30 நாட்கள் தற்காலிக இடைநிறுத்தம்: டிரம்புடன் விவாதிக்க ஜெலென்ஸ்கி விருப்பம்
உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களுக்கு தற்காலிக நிறுத்தம் மேற்கொள்ள புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.
30 நாட்கள் தற்காலிக நிறுத்தம்
உக்ரைனில் நடந்து வரும் மோதலை தணிக்கும் வகையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்பு தாக்குதல்களை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பால் தொடங்கிய நெருக்கடிக்கு தீர்வு காணும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் இடையே ஒன்றரை மணி நேரம் நீடித்த தொலைபேசி உரையாடலை தொடர்ந்து இந்த ஒப்புதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எரிசக்தி உள்கட்டமைப்பை பற்றிய இந்த வரையறுக்கப்பட்ட போர் நிறுத்தத்திற்கு புடின் ஒப்புக்கொண்டாலும், ஒட்டுமொத்த போர் நடவடிக்கையின் பரந்த 30 நாள் இடைநிறுத்தத்தை உள்ளடக்கும் ஒப்பந்தத்தை புடின் வழங்கவில்லை.
ஜெலென்ஸ்கி வேண்டுகோள்
இந்த அழைப்புக்கு பதிலளித்த உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய எரிசக்தி உள்கட்டமைப்பில் உக்ரைன் தாக்குதல்களை நிறுத்துவதற்கான அமெரிக்க முன்மொழிவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
இருப்பினும், ரஷ்ய மற்றும் அமெரிக்க தலைவர்களுக்கு இடையிலான உரையாடலில் விவாதிக்கப்பட்ட விவரங்களை தெளிவாக புரிந்து கொள்ள ட்ரம்புடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
அதில், "ரஷ்யர்கள் அமெரிக்கர்களுக்கு என்ன வழங்கினார்கள் அல்லது அமெரிக்கர்கள் ரஷ்யர்களுக்கு என்ன வழங்கினார்கள் என்பதை அறிய ட்ரம்புடன் பேச விரும்புகிறேன்," என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அத்துடன் ராஜதந்திர செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும் உக்ரைனின் தலைவிதி தொடர்பான எதிர்கால பேச்சுவார்த்தைகளில் உக்ரைன் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை ஜெலென்ஸ்கி மேலும் வலியுறுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |