செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை அவசர மனு! முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையிற் எய்ம்ஸ் மருத்துவக்குழு பரிசோதிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை
தமிழக மதுவிலக்கு உட்பட மூன்று துறைகளுக்கு அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையின் சோதனையைத் தொடர்ந்து நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்த பின்னர், திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அமலாக்கத்துறை மனுத்தாக்கல்
இந்த நிலையில், ஜாமீன் மனுவுக்கு உத்தரவு பிறப்பிக்கும் வரை இடைக்கால ஜாமீன் மனு மற்றும் காவிரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்றக் கோரும் மனு உள்ளிட்டவை மீது இன்று சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
இதற்கிடையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலையை எய்ம்ஸ் மருத்துவக்குழு பரிசோதிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பில் அவரது ஜாமீன் மனுவுடன் சேர்த்து இந்த கோரிக்கை மனுவும் இன்று விசாரிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |