ED அதிகாரியே லட்சக்கணக்கில் லஞ்சம்.., கையும் களவுமாக சிக்கியதால் பரபரப்பு
தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி கையும் களவுமாக சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்சம் பெற்ற ED அதிகாரி
திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மீது அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்வதற்கு அங்கித் திவாரி என்ற அமலாக்கத்துறை அதிகாரி ரூ.20 லட்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில், அமலாக்கத்துறை அதிகாரியை சிக்க வைக்க நினைத்த மருத்துவர், சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்று காலை மத்திய அரசு சின்னம் பதித்த காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரி ரூ.20 லட்சம் லஞ்ச பணத்தை வாங்கியுள்ளார்.
கைது
பின்னர், பணத்தை பெற்ற அங்கித் திவாரி திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியை திண்டுக்கல் எஸ்.பி. பாஸ்கரன் விசாரித்து வருகிறார். இதை போல, ராஜஸ்தான் மாநிலத்திலும் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |