5 ஆடம்பர கார்கள் - பென் ஸ்டோக்ஸின் வியக்க வைக்கும் சொத்துமதிப்பு
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸின் சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பென் ஸ்டோக்ஸ்
34 வயதான பென் ஸ்டோக்ஸ்(ben stokes), இங்கிலாந்து டெஸ்ட் அணியின் அணித்தலைவராக செயல்பட்டு வருகிறார்.
148 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில், 7000 ஓட்டங்களுக்கு மேல் இரட்டைச் சதம் அடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் பென் ஸ்டோக்ஸ் பெற்றுள்ளார்.
பென் ஸ்டோக்ஸ், ECB இல் இருந்து பெறும் ஊதியம், IPL ஒப்பந்தம், விளம்பர ஒப்பந்தம் மூலம் பெரும் வருமானம் பெற்று, இங்கிலாந்தின் பணக்கார கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக உள்ளார்.
சொத்துமதிப்பு
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி பென் ஸ்டோக்ஸின் நிகர சொத்துமதிப்பு 13 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.105 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து (ECB), போட்டி வருமானம் உட்பட ஆண்டு ஊதியமாக 3.3 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 28 கோடி) பெறுகிறார்.
ஐபிஎல் தொடரில் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்காக ஆடியுள்ளார்.
2017 ஐபிஎல் ஏலத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை ரூ.14.50 கோடிக்கு வாங்கியதன் மூலம், அந்த தொடரில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றார்.
2023 ஐபிஎல் தொடருக்காக, CSK அணி அவரை ரூ.16.25 கோடிக்கு வாங்கியது. ஆனால், காயம் காரணமாக 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
அடிடாஸ், ரெட் புல், கன் & மூர், டிரீம்11, ராயல் ஸ்டாக் போன்ற பிராண்டுகளின் ஒப்பந்தம் மூலம் ஆண்டுக்கு 1 மில்லியன் டொலருக்கு அதிகமாக வருமானம் பெறுவதாக கூறப்படுகிறது.
ஆடம்பர கார்கள்
மேலும், இங்கிலாந்தின் கவுண்டி டர்ஹாமில் சுமார் 1.75 மில்லியன் பவுண்ட் (இந்திய மதிப்பில் ரூ.20 கோடி) மதிப்புள்ள ஒரு ஆடம்பரமான மாளிகையை வைத்திருக்கிறார்.
மேலும், பல கோடி மதிப்புள்ள ஃபெராரி F430, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி 63, ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் SVR, ஆடி R8 ஸ்பைடர் போன்ற உயர்தர கார்களை வைத்துள்ளார்.
இது தவிர்த்து, நீண்ட கால வருமானம் பெரும் நோக்கில், பல்வேறு வணிகங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.
மேலும், இங்கிலாந்தில் இளைஞர் கிரிக்கெட் மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை ஆதரித்து, தொண்டு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார் பென் ஸ்டோக்ஸ்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |