கன்னிப்பெண்களை கொலை செய்ய ஆசைப்பட்ட காதலன்: சிக்கிய பிரித்தானிய இளம்பெண்
பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் கன்னிப்பெண்களை மட்டும் கொலை செய்ய விரும்புவதாக தனது காதலியிடம் கூற, தன் கணவனைக் கொலை செய்தால் தான் அவருடைய ஆசைகளை நிறைவேற்றி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
விளைவு?
12 கொலைகள்...
Image: Daily Mirror
சீரியல் கில்லரின் கதை
பிரான்சில் பிறந்த Michel Fourniret என்பவர் 1966ஆம் ஆண்டு, இளம்பெண் ஒருத்தியை பாலியல் ரீதியாக தாக்கியதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த காலத்தில் Monique Olivier என்ற பெண்ணுடைய பேனா நட்பு கிடைத்துள்ளது Michelக்கு. அந்தப் பெண்ணுக்கு எழுதிய கடிதங்களில் தனது மனதிலுள்ள தவறான ஆசைகளையெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார் Michel.
Image: PA
கன்னிப்பெண்களாக தேர்வு செய்து அவர்களை சீரழித்துக் கொலை செய்யவேண்டும் என்பது தனது ஆசை என Michel கூற, தனது கணவனைக் காலி பண்ண உதவினால் Michelஉடைய ஆசைகளை நிறைவேற்ற உதவுவதாக வாக்களித்துள்ளார் Monique.
1987 ஆம் ஆண்டு Michel விடுதலை பெற, Moniqueக்கும் அவருக்கும் தவறான உறவு ஏற்பட்டுள்ளது. அத்துடன் இருவருமாக சேர்ந்து இளம்பெண்களைக் குறிவைத்துள்ளார்கள்.
காரில் லிஃப்ட் தருவதாக Monique இளம்பெண்களை ஏமாற்றி அழைத்துவர, கூடவந்து இணைந்துகொள்ளும் Michel அந்த இளம்பெண்களை வன்புணர்ந்து கொலை செய்வார்.
Image: AFP/Getty Images
சிக்கிய பிரித்தானிய இளம்பெண்
இப்படி 8 முதல் 12 இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் இங்கிலாந்திலுள்ள Newnham என்ற இடத்தைச் சேர்ந்த Joanna Parrishம் ஒருவர்.
1990ஆம் ஆண்டு, பிரான்சிலுள்ள Auxerre என்ற இடத்தில் Joannaவின் உடல் கிடைத்த நிலையில், அவரையும் தான்தான் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார் Michel.
ஆனால், விசாரணை துவங்கும் முன்பே 2021ஆம் ஆண்டு Michel மரணமடைந்துவிட்டார்.
Image: BELGA/AFP via Getty Images
மகளுடைய மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லயே என Joannaவின் பெற்றோர் கவலையில் ஆழ்ந்திருந்த நிலையில், தற்போது Michelஇன் கூட்டாளியான Monique விசாரணைக்குட்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நவம்பர் மாதம் 15ஆம் திகதி Monique மீதான விசாரணை துவங்க உள்ள நிலையில், Joannaவின் தந்தையான Roger Parrishம் மற்ற குடும்ப உறுப்பினர்களும் பிரான்ஸ் செல்ல இருக்கிறார்கள். தங்கள் மகளுக்கு நீதி கிடைப்பதற்கு இதுதான் கடைசி தருணமாக இருக்கக்கூடும் என்கிறார் Roger.
Image: FRENCH POLICE/AFP via Getty Image