5-வது டெஸ்ட் 3-வது நாள்: புஜாரா அரைசதம்., நிலைமை இந்தியாவுக்கு சாதகம்
இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது.
முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 84 ஓட்டங்களுக்கு 5 விக்கெட் என்ற ஸ்கோருடன் 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
ஜானி பேர்ஸ்டோ மட்டும் தனி ஆளாக போராடி சதம் விளாசினார். பின்னர் 106 எடுத்த நிலையில் ஷமியின் பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஜானி பேர்ஸ்டோ.
மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 284 ஓட்டங்களை எடுத்தது.
இதனையடுத்து 132 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. சுப்மான் கில் 4 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, விஹாரி 11 ஓட்டங்களில் வெளியேறினார்.
இதனையடுத்து, புஜாரா, கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். விராட் கோலி 20 ஓட்டங்களில் வெளியேறினார்.
மீண்டும் மட்டமாக அவுட் ஆன கோலி! தன்னம்பிக்கையை இழந்துவிட்டதாக கூறும் பிரபல வீரர்
இதனையடுத்து ரிஷப் பண்ட் களத்துக்கு வந்து வழக்கம் போல் அதிரடியாக விளையாட, மறுமுனையில் நிதானமாக விளையாடிய புஜாரா அரைசதம் அடித்தார்.
ரிஷப் பண்ட் 30 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்., 3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 125 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. தற்போது இங்கிலாந்தை விட இந்திய அணி 257 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
திங்கட்கிழமை 2 செஸன்ஸ்கள் இந்தியா விளையாடி கூடுதலாக ஒரு 200 ஓட்டங்களைச் சேர்த்தால், எஞ்சியுள்ள 4 செஸன்களில் இங்கிலாந்தின் 10 விக்கெட்டுகளை எடுக்க, இந்தியாவுக்கு நிறைய நேரம் கிடைக்கும். தற்போது நிலைமை இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது எனலாம்.