இங்கிலாந்தை வாட்டும் வெப்பம்: குழாய்களில் தண்ணீர் பயன்படுத்த பொதுமக்களுக்கு தடை
பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்காக குழாய்கள் மூலம் தண்ணீர் பயன்படுத்துவதை பல நிறுவனங்கள் தடை செய்துள்ளன.
இங்கிலாந்தை வாட்டும் வெப்பம்
வெப்ப அலைகள் காரணமாக பிரித்தானியாவின் பல பகுதிகள் பல வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. இந்த ஆண்டில் மட்டும் கடந்த வியாழக்கிழமை வரை கிட்டத்தட்ட 8 முறை இங்கிலாந்தின் வெப்பம் 34°C-ஐ தொட்டுள்ளது.
இது 1976 மற்றும் 2020ம் ஆண்டின் வெப்ப சாதனைகளை சுலபமாக முறியடித்துள்ளது.

தண்ணீர் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள்
இந்நிலையில் வெப்ப அலை காரணமாக பிரித்தானியாவில் வறட்சி ஏற்படாமல் தடுக்க நாட்டின் பல நீர் வழங்கல் நிறுவனங்கள் மிக கடுமையான கட்டுப்பாட்டை அறிவித்து வருகின்றனர்.
தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்கவும், கையிருப்பில் இருக்கும் தண்ணீரை பாதுகாக்கவும் தண்ணீர் பயன்பாட்டிற்கான புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்களுக்கு நீர் வழங்கல் நிறுவனங்கள் விதித்துள்ளன.
அதிகப்படியான வெப்பம் காரணமாக தண்ணீரின் தேவை அதிகரித்து இருப்பதால், பல நீர் வழங்கல் நிறுவனங்கள் தற்காலிகமாக குழாய்கள் மூலமாக தண்ணீர் பயன்படுத்துவதற்கு பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளனர்.
இந்த தடையை ஆங்க்லியன் வாட்டர்(Anglian Water), சதர்ன் வாட்டர்(Southern Water), கேம்பிரிட்ஜ் வாட்டர்(Cambridge Water),சவுத் ஈஸ்ட் வாட்டர்(South East Water) ஆகியவை தங்களின் லட்சக்கணக்கான பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மேலும் பெரும்பாலான இந்த புதிய கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை அதிகாலை 1 மணி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வறட்சி எச்சரிக்கை
டெவோன், கார்ன்வால் மற்றும் ஈஸ்ட் ஆங்க்லியா என குறிப்பிட்ட பகுதிகளில் வறட்சி ஏற்படும் அபாயம் குறித்தும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |