லண்டன் மைதானத்திலும் இங்கிலாந்திடம் வீழ்ந்தது இலங்கை கிரிக்கெட் அணி! தொடர் தோல்வியால் எழும் விமர்சனம்
இலங்கையுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்தில் சுற்றுபயணம் மேற்கொண்டு இலங்கை அணி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை இங்கிலாந்து முழுவதுமாக வென்றது.
இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இதையடுத்து நேற்று லண்டன் தி ஓவல் மைதானத்தில் இரண்டாவது போட்டி நடைபெற்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் களத்தடுப்பை தேர்வு செய்ய இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது.
Sri Lanka end their innings at The Oval on 241/9.
— ICC (@ICC) July 1, 2021
Will it prove to be a challenging total for England? #ENGvSL | https://t.co/0Oqza0xzb0 pic.twitter.com/Hq1z6RH1sA
அணியின் முதல் நான்கு விக்கெட்டுகளும் 21 ஓட்டங்களுக்குள்ளேயே வீழ்த்தப்பட்டன. எனினும் தனஞ்சய டிசில்வா, தசூன் சானக்க மற்றும் ஹசரங்கவின் துடுப்பாட்டம் இலங்கையின் ஓட்ட இலக்கினை 241 என்ற நிலைக்கு கொண்டு சென்றது.
தனஞ்சய டிசில்வா மொத்தமாக 91 பந்துகளில் 13 பவுண்டரிகள் அடங்கலாக 91 ஓட்டங்களையும், சானக்க 67 பந்துகளில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கலாக 47 ஓட்டங்களையும் எடுத்தனர்.
பின்னர் 242 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்துக்கு ஆரம்ப வீரர்களான ஜேசன் ரோய் மற்றும் ஜோனி பெயர்ஸ்டோ ஆகியோர நல்ல ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர்.
An important knock from Dhananjaya de Silva as he brings up his half-century ?
— ICC (@ICC) July 1, 2021
?? are 104/5 after 25 overs.#ENGvSL | https://t.co/FKqd3EusUB pic.twitter.com/IBNP6PJSRx
இருவரும் இணைந்து 76 ஓட்டங்களை பகிர்ந்து கொள்ள, 12.4 ஆவது ஓவரில் ஹசரங்கவின் பந்து வீச்சில் ஜோனி பெயர்ஸ்டோ 29 ஓட்டங்களுடன் போல்ட் ஆனார். தொடர்ந்து 17.1 ஆவது ஓவரில் ஜேசன் ரோய் தனஞ்சய டிசில்வாவின் பந்து வீச்சில் 52 பந்துகளில் 10 பவுண்டரிகள் அடங்கலாக 60 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து வெளியேறினார்.
மூன்றாவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் இயன் மோர்கன் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் வலுவான இணைப்பாட்டத்தை வெளிப்படுத்த, இங்கிலாந்து 43 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 242 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
ஜோ ரூட் 68 ஓட்டங்களுடனும், இயன் மோர்கன் 75 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இலங்கை அணியின் தோல்விகள் தொடர்வது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
England win the 2nd ODI!
— ICC (@ICC) July 1, 2021
Eoin Morgan and Joe Root’s unbeaten 140 run partnership guiding the hosts to victory. #ENGvSL | https://t.co/jAzRp7prGo pic.twitter.com/3ht88WPuCt