எண்ணூர் அனல் மின் நிலையத்தில் விபத்து: 9 வடமாநில பணியாளர்கள் உயிரிழப்பு
சென்னை அனல்மின் நிலையத்தில் கட்டுமான பணியின் போது 9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுமானப் பணியின் போது விபத்து
சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் புதிய அலகுகளுக்கான ராட்சத வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
இந்த கட்டுமான பணியின் போது திடீரென சாரம் சரிந்து விழுந்ததில் 9 வடமாநில தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதே நேரத்தில் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிவாரணம் அறிவிப்பு
இந்நிலையில் இந்த எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் இந்திய பிரதமர் மோடியும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார், அத்துடன் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50000 பிரதமர் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |