நான் பதில் சொல்லும் போதெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி அவையில் இருப்பதில்லை: உதயநிதி விமர்சனம்
நான் பதில் சொல்லும் போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவையில் இருப்பதில்லை என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
உதயநிதி பேசியது
தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "என்னுடைய காரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஏறும்போது ரூட் மாற மாட்டேன் என்றார்.
ஆனால் அவர் தற்போது டெல்லியில் ரூட் மாறிவிட்டார். டெல்லியில் அதிமுக அலுவலகம் செல்வதற்கு 3 கார்கள் மாறி தான் சென்றுள்ளார்.
பாசிஸ்டுகள் எத்தனை ரூட்டுகள் போட்டு அடக்கமுயற்சி செய்தாலும், பட்ஜெட்டில் ஒரே "ரூ" போட்டு முதலமைச்சர் அலற செய்துள்ளார்.
எதிர்க்கட்சி தலைவரும் அவருடன் கூட்டணி வைப்பவர்களும் ஆக்கப்பூர்வமான அரசியல் செய்ய வேண்டும். தமிழகத்தில் இந்தி திணிப்பு மட்டுமல்ல, எந்தவொரு திணிப்பும் வரக்கூடாது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊர்தோறும் திட்டங்களை கொண்டு சேர்ப்பவராகவும், இந்திய ஜனநாயகத்தின் போர்க்குரலாகவும் உள்ளார். நான் பதில் சொல்லும் போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவையில் இருப்பதில்லை" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |