ஈக்குவடோரியல் கினியா தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 98-ஆக உயர்வு; நெஞ்சை உலுக்கும் காட்சிகள்
ஈக்குவடோரியல் கினியாவில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் குறைந்தது 98 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுமார் 200,000 மக்களைகே கொண்ட கடலோர நகரமான Bata-வில் உள்ள ஒரு இராணுவ வளாகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அடுத்தடுத்து தொடர்ந்து 4 பயங்கரமான குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
அந்த சம்பவம் நடந்த அன்று 31 பேர் பலியானதாக கூறப்பட்டது. ஆனால், பலியானோரின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக 98 பேர் இருந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
பலியானவர்களில் இருவர் இராணுவ வீரர்கள் என்றும் மறவர்கள் பொதுமக்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பயங்கர சம்பவத்தில் குறைந்தது 615 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 299 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. உடைந்த கான்கிரீட் மற்றும் முறுக்கப்பட்ட உலோகக் குவியல்களுக்கு அடியில் இருந்து குழந்தைகள் வெளியேற்றப்படுவதையும், சாலையின் ஓரத்தில் வரிசையாக மூடி வைக்கப்பட்ட உடல்களையும் உள்ளூர் ஊடகங்கள் காண்பித்தன.
இந்த கோர விபத்துக்கு அலட்சியமான இராணுவத்தினரும், ஆயுத சேமிப்பு கிடங்கிற்கு அருகில் நெருப்பை மூட்டிய பொறுப்பற்ற விவசாயிகளும் தான் காரணம் என அந்நாட்டு ஜனாதிபதி Teodoro Obiang Nguema Mbasogo குற்றம் சாட்டியுள்ளார்.
The devastation caused by Equatorial Guinea blasts | https://t.co/4GZm46LNML via @AJEnglish | #GuineaEcuatorial pic.twitter.com/7SMlU2YmeE
— sorin furcoi (@furcoisorin) March 9, 2021
⚠️Datos de la emergencia sanitaria en Bata:
— Guinea Salud (@GuineaSalud) March 8, 2021
? 615 heridos:
- 316 dados de alta
- 299 permanecen ingresados en Hospital Regional de Bata, Centro Médico la Paz y Policlínico Guinea Salud
?Cifra oficial de fallecidos:
- 98 fallecidos reportados hasta ahora
Fuente: @La_Vice_Press pic.twitter.com/03ADU4peOH