இந்தியாவிற்கு எதிராக... பாகிஸ்தான் இராணுவ தளபதியை நேரில் பாராட்டிய துருக்கி ஜனாதிபதி
பாகிஸ்தானின் புதிய பீல்ட் மார்ஷல் அசிம் முனிரை துருக்கிய ஜனாதிபதி தையிப் எர்டோகன் வரவேற்று, பதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
திறம்பட எதிர்கொண்டதாக
பாகிஸ்தான் இராணுவ தளபதி ஒருவரின் எரிச்சலூட்டும் ஒரு வகுப்புவாத பேச்சால் ஈர்க்கப்பட்டு இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது.
இதில் 26 சுற்றுலாப்பயனிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா தரப்பில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ஆனால், இந்தியா முன்னெடுத்த தாக்குதலை திறம்பட எதிர்கொண்டதாக குறிப்பிட்டு தளபதி அசிம் முனிருக்கு பாகிஸ்தான் அரசாங்கம் பீல்ட் மார்ஷல் என்ற உயரிய பொறுப்பை அளித்து கெளரவித்தது.
பாகிஸ்தானுடன் தொடர்புடைய எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதலுக்கும், அதைத் தொடர்ந்து இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்கும் இந்தியாவின் இராணுவ பதிலடிக்குப் பிறகு, பாகிஸ்தான் நிர்வாகம் அதன் இராணுவத் தளபதியை மிகுந்த நெருக்கடியின் மத்தியில்ல் பதவி உயர்வு செய்ய முடிவு செய்தது.
இது இந்தியாவை தாங்கள் திறம்பட எதிர்கொண்டோம் என மக்களை நம்பவைக்கும் ஒரு நாடகம் என்றே பரவலாக கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே துருக்கியின் ஜனாதிபதி தையிப் எர்டோகன் பாகிஸ்தானின் புதிய பீல்ட் மார்ஷல் அசிம் முனிரை பாராட்டியுள்ளார்.
துருக்கியின் சமீபத்திய சில முடிவுகள், அதன் ஜனாதிபதி எர்டோகன் பாகிஸ்தானின் பயங்கரவாதக் கூறுகளை வெளிப்படையாக ஆதரிப்பதைக் குறிக்கின்றன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியா 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை ஒழித்தது.
நீண்ட காலமாக ஆதரவு
இதனையடுத்து எர்டோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முன்னெடுத்த தாக்குதல்களில் கொல்லப்பட்ட நமது சகோதரர்களுக்கு அல்லாஹ்வின் கருணைக்காக நான் பிரார்த்திக்கிறேன், மேலும் பாகிஸ்தானின் சகோதர மக்களுக்கும் அரசுக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
மட்டுமின்றி, ஜம்மு காஷ்மீரில் இந்தியப் பகுதிக்குள் பாகிஸ்தான் படையெடுப்பு மற்றும் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததற்கு ஜனாதிபதி எர்டோகன் நீண்ட காலமாக ஆதரவளித்து வருகிறார்.
மேலும், இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் பயன்படுத்திய 300-400 ட்ரோன்கள் பெரும்பாலும் துருக்கியால் வழங்கப்பட்டவை. இந்த ட்ரோன்கள் இந்தியாவில் இராணுவம் மற்றும் பொதுமக்கள் பகுதிகளை குறிவைத்தன.
இது தவிர, துருக்கி தனது போர்க்கப்பலை கராச்சி துறைமுகத்திற்கு அனுப்பியது, அதை வழக்கமான நடவடிக்கை என்றே துருக்கி அரசாங்கம் குறிப்பிட்டது.
இந்தியாவிற்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகளில் உதவுவதற்காக துருக்கி அரசாங்கம் ஆயுதங்கள் மற்றும் இராணுவ விமானங்களையும் அனுப்பியதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |