பாகிஸ்தானுக்கு தொடர்ந்து துருக்கி ஆதரவு தருவது ஏன்? ஜனாதிபதியின் திட்டம் இதுதானாம்
துருக்கி தனது ஆதரவினை பாகிஸ்தானுக்கு தருவதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஆதரவு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்தது. பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதற்கு கண்டனம் தெரிவித்த துருக்கி, தனது ஆதரவை பாகிஸ்தானுக்கு தெரிவித்தது. இதனால் இந்தியர்கள் பலர் அந்நாட்டிற்கு செல்வதை புறக்கணித்து வருகின்றனர்.
ஆனாலும், பாகிஸ்தான் தமது சகோதர நாடு என்றும், அதற்கு தொடர்ந்து பக்க பலமாக இருப்போம் என்றும் துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன் (Erdogan) தெரிவித்தார்.
இவ்வாறு அவர் பாகிஸ்தானுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதன் பின்னணி என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
தலைவராக உருவெடுக்க
அதாவது இரண்டு நாடுகளிலும் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ளனர். அதேபோல் உலகில் வசிக்கும் இஸ்லாமியர்களில் 85 சதவீதம் பேர் சன்னி முஸ்லீம்களாக உள்ளனர். மீதமுள்ள ஷியா பிரிவு முஸ்லீம்கள் ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் அதிகம் உள்ளனர்.
எனவே, பெருவாரியாக உள்ள சன்னி இஸ்லாமியர்களின் மத்தியில் தலைவராக உருவெடுக்க வேண்டும் என்பதே எர்டோகனின் திட்டமாக உள்ளது.
இதன் காரணமாகவே சன்னி இஸ்லாமிய நாடுகளுக்கு துருக்கி தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது என்று கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவிற்கும், வங்காளதேசத்திற்கும் இடையேயுள்ள பிரச்சனையிலும் துருக்கி புகுந்துள்ளது. இதற்கு காரணம் வங்காளதேசத்திலும் அதிகளவில் சன்னி இஸ்லாமியர்கள் உள்ளார் என்பதேயாகும்.
எனவே, உலகம் முழுவதும் வசிக்கும் சன்னி இஸ்லாமியர்களின் தலைவர் போன்ற தோற்றத்தை உருவாக்க எர்டோகன் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |