ஹமாஸ் பயங்கரவாதிகள் அல்ல, போராளிகள்! இஸ்ரேலை கடுமையாக சாடிய துருக்கி ஜனாதிபதி
காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை கண்டித்த துருக்கி ஜனாதிபதி எர்டோகன், ஹமாஸ் தாயகத்தை பாதுகாக்கும் போராளிகள் குழு என குறிப்பிட்டார்.
7000த்தை தாண்டிய உயிரிழப்பு
ஹமாஸ் அமைப்பை பயங்கரவாதிகள் என இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளன. இரு தரப்பு மோதலிலும் பலியானோர் எண்ணிக்கை இதுவரை 7,000ஐ தாண்டியுள்ளது.
3வது வாரமாக நீடித்து வரும் இந்தப் போரில், காஸாவுக்குள் புகுந்து இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
Reuters
ஹமாஸ் போராளிகள் குழு
இந்த நிலையில், இஸ்ரேலை கண்டித்துள்ள துருக்கி ஜனாதிபதி எர்டோகன் ஹமாஸ் போராளிகள் அமைப்பு என கூறியுள்ளார்.
ஏற்கனவே போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்த எர்டோகன், தனது கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இஸ்ரேலை மீண்டும் ஒருமுறை கண்டித்தார்.
அவர் பேசும்போது, 'இஸ்ரேலிய மக்களுடன் துருக்கிக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஹமாஸ் ஒரு பயங்கரவாதக் குழு அல்ல, ஆனால் தாயகத்தைப் பாதுகாக்கும் போராளிகளின் குழு. இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்' என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |