1 பில்லியன் யூரோவிற்கு புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வாங்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடு
ரஷ்யாவுடன் எல்லையை பகிரும் ஐரோப்பிய ஒன்றிய நாடொன்று 1 பில்லியன் யூரோவிற்கு புதிய வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை வாங்க திட்டமிட்டுள்ளது.
எஸ்டோனியா அரசு, பாலிஸ்டிக் ஏவுகணைகளை எதிர்கொள்ளும் வல்லமை கொண்ட புதிய வான்வழி பாதுகாப்பு அமைப்புகளை வாங்குவதற்காக 1 பில்லியன் யூரோவிற்கும் மேற்பட்ட முதலீட்டை செய்யத் திட்டமிட்டுள்ளது.
இந்த ஆண்டு வசந்த காலத்தில் எஸ்டோனிய இராணுவம் எந்த அமைப்புகளை எவ்வளவு அளவில் வாங்குவது என்பதை தீர்மானிக்க உள்ளது.
தற்போது பரிசீலனையில் உள்ள விருப்பங்களில், அமெரிக்காவின் Patriot PAC-3, பிரான்ஸ்-இத்தாலி இணைந்த SAMP/T, மற்றும் இஸ்ரேலின் David’s Sling ஆகியவை அடங்கும்.

குறைந்தபட்ச திட்டத்தின் அடிப்படையில், சில நூறு மில்லியன் யூரோக்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதிகபட்ச திட்டத்தில் செலவு 1 பில்லியன் யூரோவை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அமைப்புகள் 2031 தொடக்கத்தில் எஸ்டோனியாவுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாங்கும் செலவுகள் மட்டுமல்லாமல், பயிற்சி, பணியாளர், பராமரிப்பு போன்ற முழுமையான செலவுகளும் கணக்கில் கொள்ளப்படும்.
கடந்த ஆண்டு, எஸ்டோனியா 200 மில்லியன் யூரோ மதிப்பிலான ஒப்பந்தத்தை MBDA France-உடன் கையெழுத்திட்டது. இதன் மூலம் Mistral-3 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் (MANPADS) வழங்கப்பட்டன.
உக்ரைன் தற்போது Patriot மற்றும் SAMP/T அமைப்புகளைப் பயன்படுத்தி ரஷ்ய ஏவுகணைகளை தடுக்கிறது. இதேபோல், எஸ்டோனியாவின் புதிய முதலீடு பால்டிக் பிராந்தியத்தின் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கியமான நடவடிக்கையாக கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |