விமானத்திலிருந்து விழுந்த ஆப்கானியர்களை கேலி செய்யும் டி-ஷர்ட்களை விற்கும் அமெரிக்க நிறுவனம்! கொந்தளித்த நெட்டிசன்கள்
அமெரிக்கன் இ-காமர்ஸ் வலைத்தளத்தில் விமானத்திலிருந்து விழுந்த ஆப்கானியர்களை கேலி செய்யும் டி-ஷர்ட்கள் விற்பனைக்கு வந்துள்ளது நெட்டிசன்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றியதை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேற ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர்.
காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்காவினல் C17 இராணுவ விமானத்தின் சக்கரத்தில் பயணித்த அப்கானியர்கள், நடுவானில் விமானத்திலிருந்து கீழே விழுந்து பலியான வீடியோ இணையத்தில் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் நிறைய பேர் ஆப்கானில் நிலவும் சூழ்நிலைக்காக அனுதாபப்பட்டனர்.
இந்நிலையில், உலகத்தையே உலுக்கிய சம்பவத்தை கேலி செய்யும் விதமாக அமெரிக்கன் இ-காமர்ஸ் வலைத்தளமான Etsy-யில் ConaneShop என்ற கடை டி-ஷர்ட்களை விற்பனை செய்து வருகிறது.
ConaneShop என்ற கடை தயாரித்து விற்கும் டி-ஷர்ட்டில், ‘காபூல் ஸ்கைடிவிங் கிளப், எஸ்டி. 2021’ என்ற வாசகத்துடன் விமானத்தில் இருந்து இரண்டு பேர் கீழே விழும் காட்சி அச்சடிக்கப்பட்டுள்ளது.
இதைக்கண்டு கடுப்பான நெட்டிசன்கள், Etsy மற்றும் ConaneShop-ஐ சரமாரியாக விமர்சித்தனர்.
மேலும், உடனடியாக அந்த டி-ஷர்ட் விற்பனை நிறுத்துமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.