ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழுத்தத்தை அடுத்து, ரஷ்யாவில் இருந்து எரிவாயு இறக்குமதிக்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறைக்க விரும்புகிறோம்
புதைபடிவ எரிபொருட்களின் வருவாய் ரஷ்யாவின் போர் பொருளாதாரத்திற்கு பயன்படுகிறது. இந்த வருவாயைக் குறைக்க விரும்புகிறோம் என்று ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் விளக்கமளித்துள்ளார்.
எரிவாயு இறக்குமதி தடைக்கு ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்களின் ஒருமித்த ஒப்புதல் தேவை. ஐரோப்பிய ஒன்றியத் தடைகள் தொடர்பில் 27 உறுப்பு நாடுகளிடையே தீவிர விவாதங்கள் தொடங்கப்படுகிறது.
ஏற்கனவே 2028 ஜனவரி 1 முதல் ரஷ்ய எரிவாயு இறக்குமதியில் இருந்து விலக ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வந்த நிலையில், தற்போது ட்ரம்பின் அழுத்தம் காரணமாக 2027 ஜனவரி 1 முதல் அமுலுக்கு கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
எரிவாயு மட்டுமின்றி, ரஷ்யாவின் ரகசிய எண்ணெய் கப்பல்கள் மற்றும் கிரிப்டோகரன்சி பரிமாற்றங்கள் தொடர்பிலும் தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருகிறது.
புதிய தடைகள் குறித்த முழு விவரங்களையும் வான் டெர் லேயன் மற்றும் கல்லாஸ் இருவரும் வெளியிடவில்லை, ஆனால் இது ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய வங்கிகள், சீன சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் குறிவைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
[
நடவடிக்கைகள் பாயும்
வான் டெர் லேயன் தெரிவிக்கையில், ரஷ்ய போருக்கு யார் பொருளாதார உதவிகள் செய்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவர்கள் மீது இனி நடவடிக்கை எடுப்போம் என்றார்.
சீனா உள்ளிட்ட மூன்றாம் நாடுகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள், எண்ணெய் வர்த்தகர்கள், பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள் மீது இனி நடவடிக்கைகள் பாயும் என்றார்.
ரஷ்ய எரிசக்தி இறக்குமதியில் இருந்து விரைவாக வெளியேறுவதற்கான எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய திட்டமும் ரஷ்யாவைப் பாதிக்காது என்றும் அதன் நிலைப்பாட்டை மாற்றும்படி கட்டாயப்படுத்தாது என்றும் ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ஆனால், ரஷ்யாவில் இருந்து எரிவாயு இறக்குமதிக்கு தடை விதிப்பதுடன், பற்றாக்குறை ஏற்பட்டால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அமெரிக்காவில் இருந்து எரிவாயு வாங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி வரி விதித்து வர்த்தகத்திற்கு கட்டாயப்படுத்துவதை ஒரு கொள்கையாகவே பயன்படுத்திவரும் ட்ரம்ப் ஆட்சியில், இனி எரிசக்திக்கு என அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலை ஏற்படும். இல்லை எனில் மாற்று ஏற்பாடுகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் திட்டமிட வேண்டிய நெருக்கடிக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |