ரஷ்யாவிற்கு எதிராக 19-வது பொருளாதார தடைகள் தொகுப்பை விதித்த ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம் இன்று (23 அக்டோபர்) ரஷ்யாவிற்கு எதிராக 19-வது பொருளாதார தடைகள் தொகுப்பை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைனில் நடக்கும் போரை எதிர்த்து, ரஷ்யாவின் முக்கிய வருமான மூலங்களை குறைக்கும் நோக்கத்துடன் இந்த தடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய நடவடிக்கையில், ரஷ்யாவிலிருந்து திரவ இயற்கை எரிவாயு (LNG) இறக்குமதி செய்யும் செயல்முறையை முழுமையாக தடை செய்யப்படுகிறது.
இந்த LNG தடை இரண்டு கட்டங்களில் அமுல்படுத்தப்படும். அதாவது குறுகிய கால ஒப்பந்தங்கள் 6 மாதங்களில் முடிவடையும், நீண்ட கால ஒப்பந்தங்கள் 2027 ஜனவரி 1 முதல் நிறைவேற்றப்பட்டது.
இது ஐரோப்பிய ஒன்றியத்தின் ரஷ்ய எரிவாயு மீதான சார்பை முடிவுக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
தடைகள் தொகுப்பில் மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்ய தூதுவர்களின் நகர்வுகளை கட்டுப்படுத்தும் புதிய முறை, ரஷ்ய வங்கிகள், கிரிப்டோ பரிவர்த்தனை நிறுவங்கள் மற்றும் இந்தியா, சீனாவிலுள்ள சில நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
EU sanctions Russia 2025, Russian LNG ban Europe, 19th EU sanctions package, Europe Russia energy sanctions, Kaja Kallas EU foreign policy, Putin war funding restrictions, Russian diplomats EU travel ban, EU gas import ban Russia, Denmark LNG sanctions, Ukraine war EU response