வர்த்தகப் போரை நோக்கி நகரும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

European Union China
By Arbin Oct 08, 2026 11:27 AM GMT
Report

EU and Beijing heading for trade war: ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் வர்த்தகப் போரை நோக்கி நகர்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும் வர்த்தகப் போரை நோக்கி நெருங்கி வரும் நிலையில், சீனாவுடனான வர்த்தப் பற்றாக்குறை நீடிக்க முடியாதது என அந்த அமைப்பின் வர்த்தகத் தலைவர் எச்சரித்துள்ளார்.

முயன்று பார்க்கட்டும்

தீவிரமடைந்து வரும் மோதலைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்ட இரு நாள் பேச்சுவார்த்தைகளை அவர் பெய்ஜிங்கில் தொடங்கியுள்ளார்.

வர்த்தகப் போரை நோக்கி நகரும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Eu Beijing Trade War Brussels Slams

இதற்கிடையில், வர்த்தகப் போர் ஒன்றை நடத்துவதற்கான திறன் ஐரோப்பாவிற்கு இல்லை என்று எச்சரித்த சீனா, அவர்கள் முயன்று பார்க்கட்டும் என்று வெளிப்படையான சவாலை விடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளப் புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு, ஒவ்வொரு நாளும், சீனா ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஒரு பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏற்றுமதி செய்துள்ளது.

ஜெருசலேமில் உள்ள பிரித்தானியத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்ட இஸ்ரேல்: நடவடிக்கைகள் தீவிரம்

ஜெருசலேமில் உள்ள பிரித்தானியத் தூதரகத்தை மூடுமாறு உத்தரவிட்ட இஸ்ரேல்: நடவடிக்கைகள் தீவிரம்

கார்கள் முதல் இரசாயனங்கள் வரையிலான தொழில்களில் ஐரோப்பியப் போட்டியாளர்களைப் பாதிக்கும் வகையில், அரசு மானியங்கள் மற்றும் விலைக் குறைப்பு உள்ளிட்ட சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளே இதற்குக் காரணம் என்று ஐரோப்பாவில் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆசியாவின் மாபெரும் சக்தியான சீனா, ஐரோப்பாவின் தொழில் துறைக்கு இன்றியமையாத அரிய வகை கனிமங்கள் போன்ற பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்தலாம்; அல்லது சீனாவுக்கான ஐரோப்பிய ஏற்றுமதிக்குத் தடைகளை ஏற்படுத்தலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இரு பெரும் சக்திகளான பிரான்ஸும் ஜேர்மனியும் சீனாவுக்கு எதிரான தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப்போவதாக அச்சுறுத்தி வரும் சூழலில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகத் தலைவர் செஃப்கோவிச் பெய்ஜிங்கில் இரண்டு நாட்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.

வர்த்தகப் போரை நோக்கி நகரும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Eu Beijing Trade War Brussels Slams

இந்த வாரத் தொடக்கத்தில் வெளியான கடிதம் ஒன்றில், சீனாவின் எந்தவொரு பதற்ற அதிகரிப்பிற்கும் விரைவாகப் பதிலளிப்பதற்கு ஒரு நம்பகமான வழிமுறை தேவை என்று ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மற்றும் சேன்ஸலர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் ஆகியோர் அழைப்பு விடுத்திருந்தனர்.

முன்மொழியப்பட்ட இந்த ஆயுதம், அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. வர்த்தக ரீதியான ஆதிக்க நடவடிக்கைகளுக்குச் சில நாட்களுக்குள்ளேயே பதிலளிக்கும் அதிகாரத்தை ஐரோப்பிய ஆணையத்திற்கு இது வழங்கும்.

மட்டுமின்றி, பிற நடவடிக்கைகளுக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக பாசூக்கா (trade bazooka) என்று அழைக்கப்படும் கட்டாயப்படுத்தலுக்கு எதிரான வழிமுறையை' (Anti-Coercion Instrument) ஐரோப்பிய ஆணையம் பயன்படுத்துவதை எளிதாக்குவதையும் இது முன்மொழிந்தது.

புதிய நடவடிக்கை

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அல்லது நிறுவனங்கள் மீது தேவையற்ற அழுத்தத்தைச் செலுத்துவதாகக் கண்டறியப்படும் நாடுகளிலிருந்து வரும் வர்த்தகம் மற்றும் முதலீட்டைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த, இதுவரை பயன்படுத்தப்படாத ஒரு புதிய நடவடிக்கைத் தொகுப்பு இதுவாகும்.

வர்த்தகப் போரை நோக்கி நகரும் ஐரோப்பிய ஒன்றியமும் சீனாவும்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Eu Beijing Trade War Brussels Slams

இருப்பினும், இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் ஆதரிக்கவில்லை. யூரோ மண்டலத்தின் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடான ஸ்பெயின், சமீபத்திய ஆண்டுகளில் சீனாவிடம் நெருக்கமானப் போக்கையே கடைப்பிடித்து வருகிறது.

இந்த நிலையில், பாதுகாப்புவாத நடவடிக்கைகளுக்கு எதிராகச் செவ்வாய்க்கிழமையன்று சீனா பிரான்ஸ் மற்றும் ஜேர்மனிக்கு உடனடியாக எச்சரிக்கை விடுத்தது.

தவறான பாதையில் தவறான முறையில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; இல்லையெனில், அதன் விளைவுகளை இறுதியில் அவர்களே அனுபவிக்க நேரிடும் என்று சீனத்து வர்த்தக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US