ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையே மோதல்...49 வீரர்கள் உயிரிழப்பு: EU பிரதிநிதி முக்கிய அறிவுறுத்தல்!
ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையிலான மோதலில் 49 வீரர்கள் உயிரிழப்பு.
பகைமைகளை இரு தரப்பும் உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும் EU பிரதிநிதி அறிவுறுத்தல்.
ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையேயான சமீபத்திய மோதல் முன்னேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே பயங்கரமான ஆயுத மோதல்கள் வெடித்தன. இந்த தாக்குதலில் குறைந்தது 49 வீரர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக ஆர்மேனிய நாட்டு பிரதமர் நிகோல் பஷின்யான் தெரிவித்தார்.
Heavy artillery fire being reported from Azerbaijan towards Armenia. pic.twitter.com/q3uNO4mJHi
— Moshe Schwartz (@YWNReporter) September 12, 2022
இந்த நிலையில் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையேயான சமீபத்திய முன்னேற்றங்கள் "ஆபத்தான விரிவாக்கத்தை" பிரதிநிதித்துவ படுத்துவதால் அவை நிறுத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் (Josep Borrell) செவ்வாயன்று தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜோசப் பொரெல் தெரிவித்துள்ள தகவலில், நேற்றிரவு ஆர்மீனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையே நடந்த ஆயுத மோதல்கள் நிறுத்தப்பட வேண்டிய ஆபத்தான விரிவாக்கம் ஆகும் எனத் தெரிவித்தார்.
அத்துடன் பகைமைகளை இரு தரப்பும் உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்ப வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம் எனத் தெரிவித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: 80 வருடங்களுக்கு பிறகு: பொது மக்களுடன் கைகுலுக்கி உரையாடிய மன்னர் மூன்றாம் சார்லஸ்!
மேலும் EU இரு தரப்புடனும் தொடர்பு கொள்கிறது" என்று ஜோசப் பொரெல் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
EPA