எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க புதிய திட்டம்: ஒப்புதல் வழங்கிய ஐரோப்பிய ஆணையம்!
ஐரோப்பிய யூனியனில் வரும் ஆகஸ்ட் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரை அனைத்து உறுப்பு நாடுகளும் தங்களது எரிவாயு பயன்பாட்டை 15 சதவிகிதமாக குறைக்க ஓப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை ரஷ்யா மீது விதித்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கி வந்த எரிவாயு ஏற்றுமதியை குறைத்தது.
இதனால் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் அத்தியாவசிய பொருள்களின் விலையும் கடுமையான ஏற்றத்தை கண்டது.
இந்தநிலையில், ஐரோப்பிய ஒன்றியம் செய்வாயன்று கூடி குளிர்காலத்தில் அவசரகால எரிவாயு வெட்டுக்களை அனுமதிக்கும் ஒழுங்குமுறை உடன்பாட்டை எட்டியுள்ளது.
அத்துடன், எரிவாயு குறைப்பு திட்டத்தை இந்த தருணத்தில் நிறைவேற்றி இருப்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொதுவான எரிசக்தி பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: இலங்கை திரும்பும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச: அமைச்சரவை பேச்சாளர் அறிவிப்பு
இப்போது எரிவாயு சேமிப்பு நம்மை தயார் நிலையில் வைத்து இருக்க மேம்படுத்தும், மேலும் குளிர்கால ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் மற்றும் தொழில்துறையினருக்கு மிகவும் மலிவாகவும் எளிதாகவும் இருக்கும் என செக் நாட்டின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோசப் சிகேலா தெரிவித்துள்ளார்.