தடைகள் ஒரு பக்கம்... ரஷ்ய எரிவாயு இறக்குமதியில் முந்தும் ஐரோப்பிய நாடுகள்
கடந்த ஓராண்டில் மட்டும் ஐரோப்பிய நாடுகளுக்கான சமையல் எரிவாயு ஏற்றுமதியில் இருந்து சுமார் 7 பில்லியன் யூரோவுக்கும் அதிகமானத் தொகையை ரஷ்யா ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எரிவாயு ஏற்றுமதி
இது ஐரோப்பிய அரசாங்கங்கள் விளாடிமிர் புடினின் உக்ரைன் போருக்கு நிதியுதவி அளிப்பதற்கு நிகரானது என்றே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யா மீதான தடைகள் இறுகி வரும் நிலையில், 2027 உடன் எரிவாயு இறக்குமதியை மொத்தமாகக் கைவிட இருப்பதாக பெல்ஜியம் உறுதி அளித்திருந்தது.
--- Yuri Kozyrev/NOOR
ஆனால் சைபீரியாவில் உள்ள யமால் தீபகற்பத்தில் அமைந்துள்ள ரஷ்யாவின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வளாகத்திலிருந்து ஐரோப்பிய துறைமுகங்களுக்கு செல்லும் பெரும் அளவிலான எரிவாயு ஏற்றுமதியில் இதுவரை எந்தக் குறைவும் ஏற்படவில்லை என்றே தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
2025ல் மட்டும் ஐரோப்பிய ஒன்றிய முனையங்களுக்கு 15 மில்லியன் டன்களுக்கும் அதிகமான யமால் எரிவாயு ஆர்க்டிக் பனி வழியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால், 7.2 பில்லியன் யூரோ வரையில் ரஷ்யா சம்பாதித்திருக்கலாம் என்றே ஆய்வாளர் ஒருவர் மதிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு, ஐரோப்பா ரஷ்யாவிலிருந்து குழாய் ஊடாக எரிவாயு விநியோகத்தை குறைத்துள்ள நிலையில், கடந்த ஆண்டில் யமால் வளாகத்தில் இருந்து எரிவாயு ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.
2024ல் 75.4 சதவீதமாக இருந்த இறக்குமதி, 2025ல் 76.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இறக்குமதிகள் சட்டப்பூர்வமாகவே முன்னெடுக்கப்படுவதுடன், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எரிவாயு இறக்குமதிகளைத் தடை செய்யவும் தயங்குகிறது.
--- Alamy
மட்டுமின்றி, யமால் வளாகத்தில் இருந்து எரிவாயு ஏற்றுமதியை முன்னெடுக்கும் இரண்டு நிறுவனங்களில் ஒன்றான Seapeak, பிரித்தானியாவில் இருந்து செயல்படுகிறது. Seapeak நிறுவனம் யமால் எரிவாயுவில் 37.3 சதவீதம் ஏற்றுமதி செய்துள்ளது, கிரேக்கத்தின் Dynagas நிறுவனம் 34.3 சதவீதம் ஏற்றுமதி செய்துள்ளது.
முக்கிய முதலீட்டாளராக
யமால் வளாகத்தில் இருந்து ஆர்க்டிக் ஊடாக பயணப்படும் 14 எரிவாயு கப்பல்களில் 11 எண்ணிக்கை பிரித்தானிய நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.
வெளியான தரவுகளின் அடிப்படையில், யமால் எரிவாயு வளாகத்தில் இருந்து 2025 ல் 58 கப்பல்கள் பெல்ஜியம் துறைமுகத்தை அடைந்து, 4.2 மில்லியன் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை விநியோகிக்கப்பட்டன.

ஆனால், ரஷ்யாவிடம் இருந்து 2025ல் 51 கப்பல்களில் 3.6 மில்லியன் டன் எரிவாயு சீனாவால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, 2025-ஆம் ஆண்டில் மொத்தம் 87 கப்பல்கள் 6.3 மில்லியன் டன் திரவப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை டன்கிர்க் மற்றும் மான்டுவார் ஆகிய பிரெஞ்சு துறைமுகங்களுக்கு வழங்கியுள்ளன.
பிரான்சின் முக்கிய எரிசக்தி நிறுவனமான TotalEnergies, ரஷ்யாவின் யமால் எரிவாயு திட்டத்தில் ஒரு முக்கிய முதலீட்டாளராகத் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |