நூற்றுக்கணக்கான பில்லியன் ரஷ்ய நிதியை காலவரையின்றி முடக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு
ஐரோப்பாவில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான பில்லியன் ரஷ்ய நிதியை ஐரோப்பிய ஒன்றியம் காலவரையின்றி முடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அங்கீகரிப்பார்கள்
குறித்த தொகையில் உக்ரைனுக்கு உதவும் நடவடிக்கைகளும் ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுக்க இருக்கிறது.

இதன் பொருட்டு, 210 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ரஷ்ய இறையாண்மை சொத்துக்களை தேவையான வரை நிலைநிறுத்துவதற்கான திட்டத்தை வெள்ளிக்கிழமை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அங்கீகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ரஷ்ய சொத்து முடக்கத்தை நீட்டிப்பது குறித்து ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் வாக்களிப்பதற்குப் பதிலாக, தகுதிவாய்ந்த பெரும்பான்மை வாக்கெடுப்பு மூலம் காலவரையின்றி முடக்கவே ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டு வருகிறது.
ஐரோப்பிய ஒன்றிய மக்கள்தொகையில் 65 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும், 27 உறுப்பு நாடுகளில் குறைந்தது 15 நாடுகளின் ஆதரவிற்கு சமமாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கை முடக்கப்பட்ட ரஷ்ய மத்திய வங்கியின் பில்லியன் கணக்கான சொத்துக்களைப் பயன்படுத்தி உக்ரைனின் நிதி மற்றும் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் ஒரு பெரிய கடனை அளிப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
உக்ரைன் மீதான போருக்கு எதிராக ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடைகளின் விளைவாக, ஐரோப்பாவில் 210 பில்லியன் யூரோ மதிப்புள்ள ரஷ்ய சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
மிக மோசமான செயல்
இதில் பெருந்தொகை பெல்ஜியத்தில் சிக்கியுள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவுடன் நெருக்கமான உறவைக் கொண்ட ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமுல்படுத்துவதைத் தடுக்கவும், ஐரோப்பிய ஒன்றியம் முடக்கியுள்ள நிதியை ரஷ்யாவிற்குத் திருப்பித் தருமாறு கட்டாயப்படுத்தவும் வாக்களிக்க முடியும்.

ஏற்கனவே ஹங்கேரியின் பிரதமர் விக்டர் ஓர்பன், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நகர்வை கடுமையாக எதிர்த்து வருகிறார். ஐரோப்பிய விதிகளை அப்பட்டமாக மீறும் மிக மோசமான செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், இப்படியான முடிவால், உக்ரைன் போர் முடிவுக்கு வராது என்றும் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த விவகாரத்தில் பெல்ஜியமும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
முடக்கப்பட்டுள்ள ரஷ்ய நிதியில் இருந்து உக்ரைனுக்கு கடனளிப்பது என்பது, பொருளாதார, நிதி மற்றும் சட்டரீதியான அபாயங்களை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |