சைப்ரஸில் ஒன்றுகூடிய ஐரோப்பிய தலைவர்கள்: உக்ரைனுக்கு €90 பில்லியன் நிதியுதவி
சைப்ரஸில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இணைந்து முக்கிய சந்திப்பை நடத்தியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் சந்திப்பு
சைப்ரஸ் (Cyprus) நாட்டில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒன்றிணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் முறைசாரா முக்கிய அமர்வுகளில் கலந்து கொண்டனர்.
சைப்ரஸ் நாடு தற்போது சுழற்சி முறையில் தலைமை பொறுப்பை வகித்து வருவதால் இந்த மாநாடு சைப்ரஸ் தீவு நாட்டில் உள்ள Ayia Napa கடற்கரை விடுதியில் இரவு விருந்துடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.

கடந்த 16 ஆண்டுகளாக ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய பங்காற்றி வந்த ஹங்கேரி ஜனாதிபதி விக்டர் ஓர்பன், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியுற்றதை அடுத்து இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளார்.
உக்ரைனுக்கு நிதியுதவி
இந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் உச்சி மாநாட்டில் உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமி ஜெலென்ஸ்கி மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு கிட்டத்தட்ட €90 பில்லியன் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்ததை அடுத்து ஜெலென்ஸ்கி இதில் பங்கேற்றுள்ளார்.
மேலும் ரஷ்யாவிற்கு எதிரான புதிய பொருளாதார தடைகளும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |