உக்ரைன் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம்... கடும் கோபத்தில் கொந்தளித்த ரஷ்யா
மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களால் ரஷ்யாவின் ராணுவ இலக்குகளை தாக்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ஐரோப்பிய நாடுகள் தளர்த்த வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ளது.
ராணுவ இலக்குகள் மீது
குறித்த முடிவுக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், கோபத்தையும் பதிவு செய்துள்ளது. ரஷ்யாவுக்குள் முக்கியமான ராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்த தமது நட்பு நாடுகள் மீது உக்ரைன் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ளது.
உக்ரைன் விமானத் தளங்கள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் முன்னெடுப்பது போன்று, மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை ரஷ்யா மீதும் பயன்படுத்தவே ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கோரிக்கை வைத்து வந்தார்.
இந்த நிலையில், ஐரோப்பிய நாடாளுமன்றம் தொடர்புடைய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் உக்ரைனுக்கு உதவும் ஐரோப்பிய நாடுகளின் ஆயுதங்களை இனி ரஷ்யாவுக்கு எதிராக பயன்படுத்த முடியும்.
உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு
கட்டுப்பாடுகளை நீக்க ஐரோப்பிய நாடாளுமன்றம் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இப்படியான ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது அமுலுக்கு வரும் என்றால் மிக மோசமான பதிலடி உறுதி என்றே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரித்திருந்தார்.
ஐரோப்பிய நாடாளுமன்றம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் உலகப் போருக்கு அழைப்பு விடுக்கிறதா என்றும் புடின் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே பிரான்சின் Strasbourg பகுதிக்கு ரஷ்ய ஏவுகணைகள் தாக்கலாம் என்று ரஷ்ய அரசியல்வாதி ஒருவர் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் தரப்பில் இந்த முடிவை வரவேற்றுள்ளதுடன், உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் பாராட்டியுள்ளனர். இருப்பினும், ஐரோப்பிய நாடுகள் தங்கள் முடிவை அறிவிக்க வேண்டும் என்பது இந்த விவகாரத்தில் திருப்புமுனையாக அமையும் என கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |