இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உயிருக்கு அச்சுறுத்தல்: ஈரான் ஆதரவு நபர் கைது
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட முக்கிய தலைவர்களை படுகொலை செய்யும் திட்டத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் இஸ்ரேலியர் ஒருவரை கைது செய்துள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படுகொலை செய்வதற்கான
கைதான நபர் துருக்கியில் தொடர்புகள் கொண்ட ஒரு தொழிலதிபர் என்றும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் அல்லது ஷின் பெட் உளவுத்துறை அமைப்பின் தலைவர் ஆகியோரை படுகொலை செய்வதற்கான சாத்தியக்கூறு பற்றி விவாதிக்க ஈரானில் குறைந்தது இரண்டு கூட்டங்களில் கலந்து கொண்டார் என்றும் இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் காவல்துறை மற்றும் ஷின் பெட் உளவு அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், கைது நடவடிக்கையானது கடந்த மாதம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது தெற்கு லெபனானுடன் இஸ்ரேலின் எல்லையில் அதிகரித்து வரும் பதற்றமான சூழலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த வாரம் ஷின் பெட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இஸ்ரேலின் முன்னாள் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவரையும் பாதுகாப்பு அமைச்சர் Moshe Ya’alon ஆகியோரை கொல்ல ஹிஸ்புல்லா திட்டம் தீட்டி வந்ததாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தது.
மேலும், லெபனானில் இரண்டாவது நாளாக நூதன தாக்குதல் ஒன்றை நிகழ்த்தி, ஹிஸ்புல்லா மட்டுமின்றி உலக நாடுகளையே பெரும் குழப்பத்தில் ஆழ்த்திய இஸ்ரேல், தற்போது இந்த கைது நடவடிக்கை குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
உளவு அமைப்பான ஷின் பெட்
ஜப்பான் நிறுவனம் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் தயாரித்த walkie talkie கருவிகள் திடீரென்று வெடிக்க, இதில் 20 பேர்கள் கொல்லப்பட்டதுடன், காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 450 கடந்துள்ளது.
முன்னதாக பேஜர் கருவிகளை வெடிக்க செய்ததில் இரண்டு சிறார்கள் உட்பட 12 பேர்கள் கொல்லப்பட்டதுடன், 3000 பேர்கள் காயங்களுடன் தப்பினர். இதில் பலர் ஆபத்தான கட்டத்தில் உள்ளனர். லெபனானில் நடந்த இந்த திரைப்பட பாணி தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை.
ஆனால் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் கண்டறிதல் என்பது, குறித்த தாக்குதலை மிக நுணுக்கமாக திட்டமிட்டு இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் முன்னெடுத்துள்ளது என்றே.
ஈரானில் இதுபோன்ற பல்வேறு சதிச்செயல்களை இஸ்ரேல் முன்னெடுத்துள்ளது. ஜூலை மாதம் ஹமாஸ் படைகளின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியை நூதன முறையில் இஸ்ரேல் படுகொலை செய்தது.
சமீபத்திய கைது தொடர்பில் இஸ்ரேலின் உள்ளூர் உளவு அமைப்பான ஷின் பெட் தெரிவிக்கையில், இஸ்ரேல் நாட்டவரையே சொந்த மக்களுக்கு எதிராக திருப்பிவிட ஈரான் முயன்றுள்ளது இதனால் அம்பலமாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மட்டுமின்றி பிரதமர் உள்ளிட்ட முதன்மையான தலைவர்களை கொல்லும் செயலுக்கு 1 மில்லியன் டொலர் கோரியதாகவும், முதலில் மறுப்பு தெரிவித்துள்ள ஈரான் அதிகாரிகள் பின்னர் 5,000 யூரோ தொகையை கைமாறியதாகவும் ஷின் பெட் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |