6 மாதத்திற்குள் ரஷ்ய இறக்குமதிக்கு முடிவுகட்டுவோம்! ஐரோப்பிய ஒன்றியம்
அடுத்த கட்ட பொருளாதார தடைகளில் அனைத்து ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது.
இன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பேசிய ஐரோப்பிய ஆணையத் தலைவர் Ursula von der Leyen, 6 மாதத்திற்குள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை கைவிடுவோம் என கூறினார்.
அதே போல் ரஷ்யாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதை இந்த ஆண்டு இறுதிக்குள் நிறுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
6வது கட்ட பொருளாதார தடைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்ய அரசு நடத்தும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதிக்கப்படும்.
அதேபோல், உக்ரைனில் போர் குற்றத்தில் ஈடுபட்ட உயர் ராணுவ அதிகாரிகள் மற்றும் மற்ற தனிநபர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என தெரிவித்தார்.
போர் தயார்நிலையை சோதிக்கும் முயற்சியில் பெலாரஸ் ராணுவ பயிற்சி!
மேலும், Swift சர்வதேச வங்கி பணம் செலுத்துதல் அமைப்பிலிருந்து ரஷ்யாவின் பெரிய வங்கியான Sberbank மற்றும் மற்ற இரண்டு பெரிய வங்கிகளும் நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக Ursula von der Leyen கூறினார்.
Ursula von der Leyen-ன் முன்மொழிவுகள் நடைமுறைக்கு வர ஏகமனதாக அங்கீகரிக்கப்பட வேண்டும் மற்றும் கடுமையான விவாதத்திற்கு உட்பட்டதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.