புதிய EES முறையை அமுல்படுத்திய ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பிய ஒன்றியம் (EU) புதிய EES முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த முக்கிய தகவல்களை இங்கு பார்ப்போம்.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 90 நாட்களுக்கு மேல் தங்கும் வெளிநாட்டு பயணிகளை கண்காணிக்க புதிய Entry/Exit System (EES) முறை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 12) முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த EES அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மீது கடுமையான எல்லை சோதனைகளை மேற்கொள்ளும்.
Holiday Extras நடத்திய கருத்துக்கணிப்பில், 82 சதவீத பயணிகள் இந்த புதிய விதிமுறை குறித்து தெளிவாக அறியவில்லை என்றும், 35 சதவீதம் பேர் இந்த வார இறுதியில் நடைமுறைக்கு வரும் என்பதை அறியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனால், பலர் தங்கள் பயண திட்டங்களை மாற்றியுள்ளனர் அல்லது ரத்து செய்துள்ளனர்.
முதல் கட்டமாக, Estonia, Luxembourg மற்றும் Czech Republic ஆகிய நாடுகள் முழுமையாக EES-ஐ செயல்படுத்துகின்றன.
சுவிட்சர்லாந்தில், Basel மற்றும் Geneva விமான நிலையங்களில் EES அமுல்படுத்தப்பட்டுள்ளது.
ஜேர்மனியில், Dusseldorf விமான நிலையம் முதலில் செயல்படுத்தும் நிலையில் உள்ளது, பிற விமான நிலையங்கள் பின்னர் இணைக்கப்படும்.
இந்த EES முறை, எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன், பயணிகள் எப்போது நுழைகின்றனர், எப்போது வெளியேறுகின்றனர் என்பதை கண்காணிக்க உதவும்.
2026 மார்ச் மாதத்திற்குள் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய விமான நிலையங்களிலும் EES முழுமையாக செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |